அன்பே

அன்பே

உன்னைப் பார்க்கும்போதெல்லாம் என் உயிர் புதுப்பித்துக் கொள்கிறது

என் மனமோ
புது பித்துக் கொள்கிறது

தேவதைகள் பசிக்கும் போது பழங்களை சாப்பிடுவார்கள் .

அந்தப் பழங்களுக்கு எப்போது பசி எடுக்கிறதோ அந்நேரம் உன்னை உண்ணவைத்து தன் பசியை தீர்த்துக் கொள்கிறது.

அனைவரும் தலையில் மல்லிகையை சூடுகிறார்கள்

நீ மட்டும் மூலிகையை சூடுகிறாய்


ஏகலைவனின் கட்டைவிரல் வெட்டப்பட்டதைப் போல்
உன்னை படைத்த மறுகணமே பிரம்மனின் கட்டை விரலும் வெட்டப்பட்டது

நீ பரதம் ஆடும் இரதம்
நீ
நான் உயிரினும் மேலாக நேசிக்கும் பாரதம்
என்னை நிதம் நிதம் செய்கிறாய் வதம்

நூறு இளைஞர்களை கொடுங்கள் இந்தியாவையே மாற்றி காட்டுகிறேன் என்றார் விவேகானந்தர்

அன்பே
நீ மட்டும் என்னோடு இருந்தால் போதும் இந்த உலகையே நான் மாற்றி காட்டுவேன்

நீ முகவரி இல்லாத என் முகத்தில் முதல் வரி எழுதியவள்

அகவரி இல்லாத என்
அகத்தில் காதல் வரி
எழுதியவள்.


கவிஞர் புதுவை குமார்

எழுதியவர் : குமார் (7-May-25, 12:08 am)
சேர்த்தது : புதுவைக் குமார்
Tanglish : annpae
பார்வை : 22

மேலே