ஞாயிறே வாழி

விடியலைப் போற்றி பொழிப்பெதுகை அமைந்த நிலைமண்டில ஆசிரியப்பா !!
****************************************************************
இரவில் சூழ்ந்த இருளை விரட்டக்
கருணை யுடனே கரங்கள் நீட்டி
ஒளியால் மெழுகி உளமது வியக்கக்
களையாய்க் கிழக்கில் களிப்புட னெழுந்தாய் !
உயிர்கள் வாழ்வில் உயர்வை யெட்டத்
தயக்க மின்றி தயைநீ புரிந்தாய் !
ஓயுமோ நின்பணி? ஓயா துழைக்கும்
நாயக! வானொளிர் ஞாயிறே வாழியே!!
சியாமளா ராஜசேகர்

எழுதியவர் : சியாமளா ராஜசேகர் (30-Mar-21, 6:39 pm)
சேர்த்தது : Shyamala Rajasekar
பார்வை : 50

மேலே