மைனா மீன்கொத்தி நாரை

இணைக்குறல் ஆசிரியப்பா

ஆற்றின் மணல்களே அழகாய் சரக்குந்தில்
தமிழ்நாட் டிலிருந்து வேகமாய்
இந்திய மாநிலம் முழுதும்
பயணித் தவாறே விற்பனையில்
அழகு நதிகள் எங்கும்
அந்நிய நாட்டின் முற்கள்
நிலத்தடி குடிநீர் அறுகியே
குளிர்ந்த நதியின் காற்று
கொளுத்தும் வெம்மை நிலையில்
கரைபுர மரங்கள் விதவையாய்
எருக்கும் நெறிஞ்சியும் நிறைந்தே
செம்போத் துக்குயில் தேன்சிட்டு
மைனா மீன்கொத் திநாரை
பட்டாம் பூச்சி தும்பியும்
பறக்கச் சோலையின் றியேஅனல்
கள்ளிச் சப்பாத் திஎருக்கு
எனவெங் கும்வறண் டநிலத்து
வளரும் பயிர்களே செழிப்பாய்
எதிர் தலைமுறை இடுக்கண் நிலையிலே.
¬¬¬¬¬¬¬¬¬ நன்னாடன்.

எழுதியவர் : நன்னாடன் (30-Mar-21, 10:47 am)
சேர்த்தது : நன்னாடன்
பார்வை : 66

சிறந்த கவிதைகள்

மேலே