அழகின் அழகு

அழகின் அழகு

விழிகளின் வாசலில்
காண்பதெல்லாம்
பசுமை குன்றுகள்

அருகருகே கைகோத்து
நின்று கொண்டு

பச்சை நிற சேலையில்
மறைத்து வைத்தாலும்
திமிறி தெரியும்
இவைகளின்
எழுச்சியும் இடைகளும்

அதன் இடை இடை
தெரியும் இடைவெளி
சேலையின் எல்லை
கோடுகள் போல் !

அங்கங்கு வரிசையாய்
நிற்கும் கற்பூர தைல
மரங்கள் இதன்
அழகை ஆராதித்து
கொண்டு

வானத்தில் செல்லும்
மேக கூட்டங்கள்
இதன் அழகில்
சலனித்து இறங்கி
உறவாடி

நீரை வடித்து
இதன் காலடிக்குள்
சல் சலவென
சிற்றோடைகளாய்
ஓடிக்கொண்டு

அதற்குள் துள்ளி
விளையாடும் மீன்கள்
கூட்டம் அதனால்
வெளிப்படும்
மின்னல் கீற்றுக்கள்

அழகின் அழகை
அழகாய்த்தான்
படைத்திருக்கிறது
இந்த இயற்கை !

எழுதியவர் : தாமோதரன்.ஸ்ரீ (30-Mar-21, 10:05 am)
சேர்த்தது : தாமோதரன்ஸ்ரீ
Tanglish : azhakin alagu
பார்வை : 296

மேலே