Dr A S KANDHAN - சுயவிவரம்

(Profile)எழுத்தாளர்
இயற்பெயர்:  Dr A S KANDHAN
இடம்:  Chennai
பிறந்த தேதி :  15-Jun-1952
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  07-Nov-2018
பார்த்தவர்கள்:  418
புள்ளி:  129

என்னைப் பற்றி...

நான் குழந்தைநல மருத்துவர் (MBBS. DCH ) நையாண்டி மேளம் முதல் பாகம் . இரண்டாம் பாகம் என்று இரு கவிதை நூல்களை வெளியிட்டிருக்கிறேன். முதல் பாகம் 1999 இல் வெளியீடானது . 18 ஆண்டுக்குப் பின்னர் இப்போது 2018 இல் இரண்டாம் பாகம் வெளியிட்டேன் திருவொற்றியூர் பாரதி பாசறையின் துணைத் தலைவராக இருக்கிறேன் . தமிழ் ப்பெருமக்கள் வல்லிக்கண்ணன், ஒளவை நடராஜனார் , ஈரோடு தமிழன்பன் , மறை இலக்குவனார் , தாமரை செந்தூர் பாண்டி , திறனாய்வுச் செம்மல் எழிலரசு , புலவர் மா கி இரமணர் கவி நேசன் Dr இளங்கோவன் முதலானோர் அணிந்துரை வழங்கி சிறப்பித்துள்ளனர். உலகப்படவிழாவில் பங்கேற்ற இரு குறும்படங்களை தயாரித்திருக்கிறேன்

என் படைப்புகள்
Dr A S KANDHAN செய்திகள்
Dr A S KANDHAN - Dr.V.K.Kanniappan அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
20-Mar-2019 9:49 am

நேரிசை வெண்பா

ஆன்ம நிலையில் அணுவணுகி னாலுமவன்
மேன்மை விசும்பின் விரியுமே - நோன்மையுறு
தேவரும் போற்றச் சிறந்து திகழுவான்
மேவரும்சீர் மேவும் விரைந்து. 280

- தன்னம்பிக்கை, தருமதீபிகை,
- கவிராஜ பண்டிதர் ஜெகவீர பாண்டியனார்

பொருளுரை:

ஆன்ம ஞான நிலையில் அணு அளவு தோயினும் மேன்மையான நலங்கள் மிகவும் பெருகித் தேவரும் புகழ்ந்து கொண்டாடத்தக்க உயர்ந்த மகிமைகள் உளவாம் என்கிறார் கவிராஜ பண்டிதர்.

உலகத்தையும், பலவகையாக விரிந்து பரந்துள்ள சீவ கோடிகளையும், கல் மரம் முதலிய பொருள்களையும் மனிதன் பார்க்கின்றான். பார்த்தவைகளை யெல்லாம் நினைந்து சிந்தித்து உணர்ந்து கொள்கின்றான். இங்ஙனம் ஓர்ந்து

மேலும்

யோகவியல் பற்றி கருத்துக்களைத் திரட்டிக் கொடுத்துள்ளீர்கள் .... ஆன்மாவை உணருகையில் ஆன்ம லாபம் அதிகம் .... வணக்கம் நன்றியுடன் 20-Mar-2019 11:45 pm
நேரிசை வெண்பா விரிவான விளக்கம் போற்றுதற்குரிய இலக்கியம் பாராட்டுக்கள் 20-Mar-2019 3:08 pm
Dr A S KANDHAN - Dr.V.K.Kanniappan அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
20-Mar-2019 9:35 am

நேரிசை வெண்பா

மானம் கெடுக்கும்; மரபழிக்கும்; மாண்பொழிக்கும்;
ஈனம் பெருக்கி இளிவுறுத்தும்; - தீன
இரவென்(று) உரைக்கும் இழிநரகை யாண்டும்
மருவார் உரவோர் மருண்டு. 270

- இரப்பு, தருமதீபிகை
- கவிராஜ பண்டிதர் ஜெகவீர பாண்டியனார்

பொருளுரை:

மானத்தைக் கெடுத்து மரபினை அழித்து மாட்சியை ஒழித்து ஈனத்தைப் பெருக்கி இளிவு பல செய்யும் இரவு என்னும் கொடிய நரகினை அறிவுடையார் எவ்வழியும் யாதும் அணுகார் என்கிறார் கவிராஜ பண்டிதர்.

குலமாட்சியும் குணநலங்களும் தலைமையான நிலைமைகளும் இரவால் இழிவுறுமாதலால் மரபு, மாண்பு, மானங்கள் ஈண்டு எடுத்துக் காட்டப்பட்டன.

உயர்வுக்கு உயிராதாரமாய் உள்ளத்தில் உறுதியு

மேலும்

இரவுதல் என்றால் இரத்தல் என்று புரிந்து கொள்கிறேன் .... வணக்கம் நன்றியுடன் .... 20-Mar-2019 11:35 pm
போற்றுதற்குரிய இலக்கிய படைப்புக்கு பாராட்டுக்கள் எவ்வித வேலையும் செய்யாமல், வேலை செய்வதால் கிடைக்கப்பெறும் வருமானம் இல்லாமல், ஒவ்வொரு நாளும் பணம், உணவு, பொருட்கள் ஆகியவைகளை தேவைக்கேற்ப பிறரிடம் கேட்டுப் பெற்று வாழ்க்கையை கழிக்கும் செயலுக்கு இரப்பு 20-Mar-2019 8:13 pm
Dr A S KANDHAN - வேலாயுதம் ஆவுடையப்பன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
19-Mar-2019 7:28 pm

எஸ்.ராமகிருஷ்ணன், கலாப்ரியா, நாஞ்சில்நாடன் ஆகியோர் நடுவே என்ன ஒற்றுமை? கலாப்ரியா எப்போதுமே ஆழமான மனச்சோர்வுடன் இருப்பார். விசேஷ நாட்களில் சோர்வு இன்னும் அதிகமாகும். ஆனால் எஸ்.ராமகிருஷ்ணனை நான் திருவண்னாமலையில் முதலில் பார்த்தபோது குலுங்கிக் குலுங்கிச் சிரித்துக் கொண்டிருந்தார். ”ஏன் சார் அப்டி சிரிக்கிறார்?”என்று ரகசியமாக பவா செல்லத்துரையிடம் விசாரித்தேன். ”அவர் அப்டித்தாங்க சிரிப்பாரு…” என்றார். ”அது சரி…ஆனா எதுக்கு சிரிக்கிறார்?” அவர் ”அதாங்க நானும் சொன்னேன்,அவரு அப்டித்தான் சிரிப்பாரு”.

பிறகு நான் சந்திக்கும்போதெல்லாமே எஸ்.ராமகிருஷ்ணன் குலுங்கிக் குலுங்கித்தான் சிரித்துக் கொண்டிருந்தார்.

மேலும்

நண்பர் கலாப்பிரியா கடையநல்லூர் அருகில் இடைகாலில் தற்போது நாவல்கள் கவிதைகள் கட்டுரைகள் எழுதுகிறார் நூல்கள் விமர்சனங்கள் செய்கிறார் இலக்கிய கூட்டங்களில் சிறப்பு பேச்சாளராக பங்கெடுக்கிறார் அவரோடு நேரில் பேசும்போது இளமை ஊஞ்சலாடும் அவரது இலக்கிய நட்பு என் இலக்கிய நண்பர் ராஜாராம் மூலமாக அறிமுகமானது நான் பெற்ற இலக்கிய நட்புப் பயணமாக அமைந்துள்ளது 20-Mar-2019 3:09 am
தங்கள் வாசிப்புக்கும் சிந்தித்து அளித்த கருத்துக்களுக்கு மனமார்ந்த நன்றி மருத்துவமும் இலக்கியமும் நமக்கு இரு கண்கள் . தொடரட்டும் நம் இலக்கிய சிந்தனைக்களம் 20-Mar-2019 2:58 am
எழுத்தாளர்களின் இன்னொரு முகம் இங்கு தெரிகிறது , சில ஆச்சரியங்களுடன் ... 19-Mar-2019 11:33 pm
Dr A S KANDHAN - வேலாயுதம் ஆவுடையப்பன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
19-Mar-2019 7:36 pm

நாஞ்சில்நாடன்
அங்கீகாரம் மூலம் எழுத்தாளன் உருவாவதில்லை. ஆனால் எழுத்தாளன் திரும்ப எதிர்பார்க்கக்கூடிய ஒன்றே ஒன்று அங்கீகாரம் மட்டுமே.

’எழுத்து என்பது எனக்கு தவம் அல்ல; வேள்வி அல்ல; பிரசவ வேதனை அல்ல;
ஆத்ம சோதனையோ, சத்திய சோதனையோ அல்ல; பணம் சம்பாதிக்கும் முயற்சி அல்ல: பேரும் புகழும் தேடும் மார்க்கம் அல்ல; வாழ்க்கையை புரிந்துகொள்ளும் முயற்சி; என் சுயத்தை தேடும் முயற்சி!’

எனது கருத்துக்களோடு எவரும் உடன்படலாம், மாறுபடலாம். ஆனால் அவை வாசிக்கவும் பரிசீலிக்கவும் விவாதிக்கவும் படவேண்டும் என்பது எனது எதிர்பார்ப்பு.

மேலும்

நன்றாக எழுதுவது ஒரு தவம் என்றால் அந்த எழுத்தை யாராவது விமர்சிக்கும் வரை காத்திருப்பது இன்னொரு தவம் .... 19-Mar-2019 11:27 pm
Dr A S KANDHAN - படைப்பு (public) அளித்துள்ளார்
18-Mar-2019 11:22 am

வந்த வழி மறந்து வாய்த்த வழி சேரின்
ஈன்றவர் கண் அருவி

வந்த வழிமறந்து வாய்த்த வழிசேரின்
ஈன்றவர் கண்ண ருவி

மேலும்

செழுமையான மற்றும் இயல்பான மாற்ற முடியாத கருத்துடன் கூடிய அருமைப் புனைவு 19-Mar-2019 9:47 am
Dr A S KANDHAN - படைப்பு (public) அளித்துள்ளார்
17-Mar-2019 11:15 am

மனம் பொருந்தாக்கால் பயனில மற்றின் ;
குணம் அளவாம் மணவாழ்வு


மனம்பொருந் தாக்கால் பயனில மற்றின் ;
குணமள வாம்மண வாழ்வு

மேலும்

மனமும் குணமும் வாழ்க்கையின் மகத்துவம் . நன்கு புணைந்துள்ளீர் மருத்துவரே 17-Mar-2019 6:15 pm
Dr A S KANDHAN - படைப்பு (public) அளித்துள்ளார்
15-Mar-2019 11:55 pm

தொடுதலும் ஊர்வாய் படுதலும் இன்றேல்
இருபாலர் நட்பும் இனிது

மேலும்

அருமை..மிகவும் பிடித்தது.. 16-Mar-2019 10:07 pm
அருமை தொடுதலும் படுதலும் அல்லாத நாடுதல் வீட்டுக்கும் நல்லது நாட்டுக்கும் (சரியா மருத்துவரே ) 16-Mar-2019 7:36 pm
Dr A S KANDHAN - படைப்பு (public) அளித்துள்ளார்
15-Mar-2019 8:59 am

தரும் சுகம் ; புக்கின் சாதல் தரும் தீயாம்
பருவம் தரும் மோகத் தீ


தரும்சுகம் புக்கின்சா தல்தரும் தீயாம்
பருவம் தரும்மோகத் தீ

மேலும்

சிறப்பு 16-Mar-2019 5:14 pm
யதார்த்த நிலையை அருமையாக கூறியுள்ளீர்கள் மருத்துவரே 15-Mar-2019 10:26 am
நன்று 15-Mar-2019 9:51 am
Dr A S KANDHAN - கவின் சாரலன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
28-Nov-2018 6:46 pm

ஓடையில் ஓடிய நீரை அள்ளிப்பருகினேன்
காவிரியா என்று கேட்டேன் அவனிடம்
நெல்லுக்குப் பாயும் நீரோடை இது
நீரின் பெயரெல்லாம் தெரியாது என்றான் உழவன் !

மேலும்

உண்மை மிக்க நன்றி கவிப்பிரிய சிவா 20-Jan-2019 2:15 pm
சூப்பர்... எல்லோரும் இதே கண்ணோட்டத்தில் பார்த்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்... 20-Jan-2019 1:38 pm
சரியான புரிதல் மிக்க நன்றி கவிப்பிரிய டாக்டர் A S K 13-Dec-2018 3:04 pm
சமீபத்தில் படித்த மிக நல்ல கவிதைகளில் இதுவும் ஒன்று .அதிகமானபொருள் சொல்கிறது மறைமுகமாக . 13-Dec-2018 12:00 pm
Dr A S KANDHAN - கல்பனா பாரதி அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
04-Dec-2018 10:15 pm

ஆலிலையின் நிழலின்
அழகிய தென்றல் காற்றினில்
தூளியில் உறங்குது குழந்தை !
தாலாட்டுப் பாட நேரமில்லை ஏழைத் தாய்க்கு
உடைத்துக் கொண்டிருக்கிறாள்
கற்களை எதிரே சாலை போட ....

மேலும்

மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (13)

பிரியா

பிரியா

பெங்களூரு
அருண்

அருண்

இலங்கை
கவிஞர் செநா

கவிஞர் செநா

புதுக்கோட்டை, தமிழ்நாடு
ஷிபாதௌபீஃக்

ஷிபாதௌபீஃக்

பொள்ளாச்சி
சிவா அமுதன்

சிவா அமுதன்

சென்னை

இவர் பின்தொடர்பவர்கள் (17)

Dr.V.K.Kanniappan

Dr.V.K.Kanniappan

மதுரை
ஆரோ

ஆரோ

விழுப்புரம்,(சென்னை)

இவரை பின்தொடர்பவர்கள் (13)

மேலே