பிரியா - சுயவிவரம்
(Profile)


எழுத்தாளர்
இயற்பெயர் | : பிரியா |
இடம் | : பெங்களூரு |
பிறந்த தேதி | : 20-Jul-1991 |
பாலினம் | : பெண் |
சேர்ந்த நாள் | : 24-Mar-2018 |
பார்த்தவர்கள் | : 1705 |
புள்ளி | : 243 |
மிகவும் இயல்பான அதே நேரத்தில் மிகவும் நிறைய பேசுபவள் .....ஆனால் உபயோகமா இருக்குமா என்று யோசித்து தான் பேசுவேன்.. புன்னகை என்ற சொத்தை அளவுக்கு மிகுதியாக வைத்திருப்பவள்.....
மூளை நினைத்ததை கூற தவிக்கின்றேன் ...
ஏனோ கூற வாய் மறுக்கின்றது....
என்னவாக இருக்கும் என்று மனம் தேடுகிறது ...
மூளைக்கும் மனதிற்கும் என்னஒரு மௌன போராட்டம் ...
என்னசொல்வது மனமே மௌனமே மூளையே முன்னின்று கூறுவாயோ...
காரணம் அறியாஎன் கண்ணீருக்கு பதிலும் அறியா என் கேள்விக்கு ...
வருத்தம் மட்டும் விழிகளில் காட்டாற்று வெள்ளம் போல் வழிந்தோடுகிறது ..
ஏன் வருத்தம் எதற்கு வருத்தம் என்ற காரணம் நான் அறியா ...
மனமே வேறு என்ன தான் அறிவாயோ ....
மயில்உலாவும் மலர்பூங்கா
குயில்கூவும் பூஞ்சோலை
வெயிலிலா நந்தவனம்
பயில்கிறாயோ நடைபூவே
உங்களை பத்தி பத்து விஷயம் சொல்லட்டா?
**************************************
1. இந்த நிமிஷம் இதை படிச்சுகிட்டிருக்கீங்க.
2. உங்களுக்கு தமிழ் தெரியும்.
3. உதடு பிரிக்காம “ப”னு சொல்ல முடியாது.
4. சொல்லி பார்த்துகிட்டீங்க.
6. உங்களை நெனச்சு நீங்களே சிரிச்சுக்கறீங்க.
7. சிரிச்ச சிரிப்புல அஞ்சாம்நம்பர் மிஸ் ஆனத கவனிக்காம விட்டுட்டீங்க.
8. நம்பர் 5 இருக்கா? னு செக் பண்ணி அடடே இல்லையேனு ச்சூ கொட்டறீங்க.
9. இன்னும் வாய் விட்டு சிரிக்கறீங்க… ஏன்னா உங்களுக்கு நகைச்சுவை உணர்வு சாஸ்தி.
10. அடுத்தவங்களுக்கும் கூப்ட்டு படிச்சு காட்டுவீங்க இல்லேன்னா இருக்கவே இருக்கு ”பகிர்”.
#அந
வாடிக் கிடந்தது
----மல்லிகை மொட்டு
தேடிவந்த தென்றல்
---முகத்தைவருடி முத்தமிட்டது
வாடிய மல்லிகை
----வாட்டம் தீர்ந்தது
வீடியோ நாயகியாய்
-----புன்னகை பூத்தது
சூடிட வந்தாள்
-----சுந்தரிப் பொண்ணு
பாடிவந்து தென்றல்
-----நன்றி நவின்றது
பொதிகைத் தமிழில் சொல்லெடுத்து
புதுநிலவு பொழிவில் எழிலெடுத்து
பளிங்கில் ஒரு சிலை இவளை வடித்தால்
அஜந்தா சிற்பமும் அசந்து நிற்கும்
ஜன்னலை திறந்தேன் காற்று வந்தது ...
மனதை திறந்தேன் நீ வந்தாய் ...
மௌனத்தை கலைத்தேன் மனம் ஒன்றானது ...
மனதை கலைத்தேன் மனம் இரண்டானது ....
மௌனம் மனம் இரண்டையும் கலைத்தேன் ...
""""காதல்"""" என்ற ஒன்று வந்தது ....
மலர் என்பது அவள் பெயர்
மலரும் மலர்விழி அவள்விழி
மல்லிப் போல் அழகு அவள்
மலரும் தாமரையாய் அவள்முகம்
முல்லைபோல் அவள் சிரிப்பு
அல்லித் தண்டனையை அவள் இடை
மனம் என்ற மூன்று எழுத்து இதயம் என்ற நாலெழுத்தில் உள்ளது ..
இதயம் என்ற நாலெழுத்து உடம்பு என்ற நாலெழுத்தில் அடங்குகிறது ...
உடம்பு என்ற நாலெழுத்து உயிர் என்ற மூன்றெழுத்தை சார்ந்துள்ளது ,,..
உயிர் இருப்பதை இதயம் என்ற நாலெழுத்தை கொண்டு அறிவர் ...
மனம் என்ற மூன்றெழுத்து மந்திரம் இதயம் என்ற நாலெழுத்தில் உள்ளது ..
மனம் என்ற மூன்றெழுத்து மந்திரம் என் மனதில் பதிய பல காரணங்கள் உண்டு ..
என் மனம் ஏனோ காயப்பட்டுள்ளது ....
நினைத்தது நடக்கவில்லை என்றா? நினைத்த மாதிரி நடக்கவில்லை என்றா jQuery17109654208717906736_1660988219881?
நினைத்தது நடக்குமா நடக்காதா என்றா ???
எத்தனை கேள்விகள் எனக்குள் ....
இவை அனைத்து
ரோஜாவில் இருக்கும் முட்கள் ரோஜாவிற்கு பாரமில்லை...
அது ரோஜாப்பூவை காக்கும் அரண் ..
எவரும் அதை தீண்டாமல் இருக்க அரணாக உள்ளது
அதுபோல் தான் நீயும்..
என்னையும் காக்கும் அரணாக இருக்கிறாய்
ரோஜாவின் முள் போல் பார்ப்பதற்கு
கரடு முரடாய் இருப்பாய்...
ஆனால், எனக்கு மட்டும் தான் தெரியும் அது என் மேல் வைத்திருக்கும் அன்பின் வெளிப்பாடு ..
காதல் என்ற ஒன்று மட்டும் தான் என் கண்ணுக்கு தெரியும் ....
ரோஜாவின் வாசத்தை விட உன் காதலின் வாசமே பெரியது என்னை பொருத்த வரை ....
தனிமை வாழ்வின் ஓர் அங்கம்
தனிமை வாழ்வின் ஓர் உணர்வு
தனிமையில் இனிமை ஓர் சுகம்
இனிமையில் தனிமை ஓர் வரம்
ஆனால் இனிமையில் தனிமை
காணமுடியாது ...
அது தான் தனிமையின் தனித்துவம் ...
வாழ்க்கையில் சில மணி நேரம்
தனிமை இனிக்கும் ...
வாழ்க்கையில் பல மணி நேரம்
தனிமை கசக்கும் ...
வாழ்க்கை தத்துவத்தில் வாழ்ந்து
தான் பார்க்க வேண்டும் தனிமையை ..
தனிமையில் சுகம் காண இனிமை தேவை...
தனிமையின் நண்பன் கற்பனை
கற்பனையின் ஊற்று தனிமை ...
இவை இணைபிரியா இரட்டையர்கள் ...
சுமைகளை இறக்கும் இடம் தனிமை ...
இனிமைகளை நினைக்கும் இடம் தனிமை .
தனிமை இல்லையேல் இனிமை இல்லை ....
இனிமை இல்லையேல் தனிமை உண்டு ....
என் கண்களின் கருவிழியே ...
அழகின் திருவுருவே ...
கனவில் கண்டவனே..
காவிய நாயகனே ..
கடல் அலை போல் பொங்கும்
பாசத்தை அளிப்பவனே...
சிரிப்பு என்னும் பொக்கிக்ஷத்தின்
சொந்தக்காரனே ...
கண்ணுக்கினியாளின் கண்ணுக்கினியனே..
என் சோகத்தில் பங்கெடுத்து
பாசத்தில் தோல் கொடுப்பவனே..
சிங்கார வேலரின் தீவிர பக்தனே..
என் உள்ளம் கொண்ட கள்வனே ...
உன்னை அனுதினமும் என்னும்
எண்ணம் எனக்கு தந்தவனே ..
என் அன்பு கணவனே ..
ஆருயிர் செல்வனே ...
என் இனிய மணவாளனே ...
எழுத்தாளர்களின் கவனத்திற்கு ...