மலரும் அவளும்

மலர் என்பது அவள் பெயர்
மலரும் மலர்விழி அவள்விழி
மல்லிப் போல் அழகு அவள்
மலரும் தாமரையாய் அவள்முகம்
முல்லைபோல் அவள் சிரிப்பு
அல்லித் தண்டனையை அவள் இடை
கோதிய அவள் கூந்தலில் சென்பகவாசம்
நெருங்கிப் பழக அறிந்தேன் அவள்
மென்மை செவ்வந்திப் போல இப்படி
மலரோடு இவள் உறவின் நெருக்கம்
மலரும் மங்கையும் ஒருஜாதி
என்று பாடினான் கவிஞன் இதனாலோ

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (28-Jul-22, 10:36 am)
Tanglish : naalvarum avalum
பார்வை : 339

மேலே