தனிமையில் இனிமை

தனிமை வாழ்வின் ஓர் அங்கம்
தனிமை வாழ்வின் ஓர் உணர்வு
தனிமையில் இனிமை ஓர் சுகம்
இனிமையில் தனிமை ஓர் வரம்

ஆனால் இனிமையில் தனிமை
காணமுடியாது ...
அது தான் தனிமையின் தனித்துவம் ...
வாழ்க்கையில் சில மணி நேரம்
தனிமை இனிக்கும் ...
வாழ்க்கையில் பல மணி நேரம்
தனிமை கசக்கும் ...

வாழ்க்கை தத்துவத்தில் வாழ்ந்து
தான் பார்க்க வேண்டும் தனிமையை ..
தனிமையில் சுகம் காண இனிமை தேவை...

தனிமையின் நண்பன் கற்பனை
கற்பனையின் ஊற்று தனிமை ...
இவை இணைபிரியா இரட்டையர்கள் ...

சுமைகளை இறக்கும் இடம் தனிமை ...
இனிமைகளை நினைக்கும் இடம் தனிமை .
தனிமை இல்லையேல் இனிமை இல்லை ....
இனிமை இல்லையேல் தனிமை உண்டு ....

எழுதியவர் : பிரியா (11-Apr-19, 3:36 pm)
Tanglish : thanimai
பார்வை : 2305

மேலே