பிறந்த தினம்
பிறந்த தினம்...
அனுதினத்தேடலில் புதிய அத்தியாயம் வெற்றுப்பக்கங்களோடு ஐக்கியமானது...
கடந்தகால அனுபவங்கள் சில தடுமாற்றங்களை தடைசெய்திற்று....
கனத்த இதயத்திற்கு சில துரோகங்களை துடைத்தெறிய உத்தரவு கொடுக்கப்பட்டது....
இளகிய மனதை உடைக்க அன்பு மட்டும் அனுமதி பெற்றது....
இனி நெருங்கும் மனிதர்களை ஞானமாய் அணுக ஆலோசனை கிட்டிற்று....
துரோகங்களை எண்ணிப்பார்க்க மூளைக்கு தடை உத்தரவு கொடுக்கப்பட்டது....
அந்தஸ்துபார்த்து பழக முற்படும் கூட்டத்தைவிட்டு விலகியே நிற்க உறுதிமொழி ஏற்கப்பட்டது....
பாசத்திற்கு மட்டுமே பணிந்துபோக ஆலோசனை செய்யப்பட்டது...