வீழ்த்தலாமென்று நினைத்தாயோ

வீழ்த்தலாமென்று நினைத்தாயோ....

அதிகார தோரணையில்
அடக்கிட நினைத்தாயோ...

அன்புகாட்ட மறந்து அடிமையாக்க எத்தனித்தாயோ...

வெறுப்பை மட்டுமே உமிழ்ந்து வென்றிடுவாயோ....

பணம் கொண்டு பாசத்தின் திறவுகோல் செய்திடுவாயோ....

கோபக்கோரங்கள் கொண்டு ஒப்புரவு நிகழ்த்திடுவாயோ.....

அனுசரனையின் அர்த்தமறியாமல் ஐக்கியமென்னும் அற்புதம் நிகழ்த்திடுவாயோ....

எழுதியவர் : ஜான் (11-Apr-19, 4:45 pm)
சேர்த்தது : ஜான்
பார்வை : 108

சிறந்த கவிதைகள் (இந்த வாரம்)

மேலே