வந்த வேலை
வந்த வேலை !
சின்ன ராஜாவுக்கு
சின்ன நாற்காலி கட்டமைக்க
சின்ன காட்டுக்குள்ளே
சின்ன மரத்தை வெட்டையிலெ
சின்ன சிங்கம் சினத்தை காட்ட
சின்ன கரடி சட்டென பாயுது !
புதருக்குள்ளே பதுங்கி இருந்த
புத்தாக்க பூபதி
புதுசா புத்திமதி கூற
சின்னது சின்னதுகளை வேண்ட
சின்ன ராஜா சேனை
சிக்காம சீக்கிரமா
சீமான் கோட்டைக்குள்ளே
செரெண்டர் ஆனது !
சிம்மாசனம் சீரியசா யோசிக்க
சின்ன ராஜா கட்டியது மூட்டை
இனி காட்டுக்குள்ளே வேணாம் வேட்டை
குட்டை மரம் வேண்டும் எனக்கு…
விட்டு வை வயது ஆக
என் கட்டையை வேகவைக்க !
வந்த வேலை முடியப் பார்த்து !