நிஜமாகும் என் கனவே
ஒத்தயடிப் பாதையில்
ஒளியாய் நீ வந்தவளே
உன்னுடன் சென்றாலே
நிஜமாகும் என் கனவே!
நம் காதல் நமக்குள்ளே
உருண்டோடும் நதிபோல
இரு கரையாய் இருந்தாலும்
நேசம் உண்டு நம் நடுவே.
சந்தித்த முதல் தருணம்
அழகான ஒரு காட்சி
சொல்லாமல் காதல் சொல்லும்
உன் இரு விழிகள் அதன் சாட்சி
காலங்கள் மாறினும்
காதல் ஒன்றுதான்,
கடலினுள் சேரும்
ஓர் நதி போலதான்
கரை தாண்டும் கடல்
அலை போல் நாமும்
காதல் கொண்டு
வாழ்ந்திடுவோம் நாளும்
ஒரு சேரா நிலை வந்தால்
உயிர் காற்றை தொலைத்திடுவோம்
நம் காதல் சேரும் என்றால்
வாழைப் போல் தழைதிடுவோம்
ஒத்தயடிப் பாதையில்
ஒளியாய் நீ வந்தவளே
உன்னுடன் சென்றாலே
நிஜமாகும் என் கனவே!