காதல்

கடலே கடலே வங்க கடலே
கடலுந்தன் நீல நிறத்தில் -ஒளிரும்
அவள் நீல விழிகளைக் கண்டேனே

மதியே மதியே வான் மதியே
நிந்தன் தண்ணில அவள் குளிர்முகம்
நான் கண்டுகொண்டேனே

மயிலே மயிலே கோல மயிலே
நிந்தன் தோகை விரி ஆட்டத்தில்
துள்ளி வரும் அவள் வருகைப் கண்டேனே -நெஞ்சில்
ஏந்திவரும் இன்பாக் காதலுடனே நான்

குயிலே குயிலே சோலைக் குயிலே
இசைக்கும் நிந்தன் குயிலோசையில்
பாடிவரும் அவள் காதல் கீதம் இசைக்க
கேட்டேனே நான்

மலரே மலரே வாசமிகு மல்லிகை மலரே
தென்றலில் மிதந்துவரும் நிந்தன் வாசத்தில்
அவள் தரும் தீண்டும் இன்பம் நுகர்ந்தேன் -நான்
உணர்ந்தேனே உள்ளம் உருகவே

மேகமே மேகமே மழைத் தரும் கார்முகிலே
காதலி எந்தன் அவள் தரும் தூது
ஏந்தி தான் வருகின்றாயோ சொல்
சொல் கொஞ்சம் நீயே -என் மனத்தில்
பேரின்பம் சேர்த்திடவே

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசுதேவன் (26-Sep-25, 10:07 am)
Tanglish : kaadhal
பார்வை : 9

மேலே