ஊர்வசியோ இவள்தான் இன்னிசை நேரிசை வெண்பா
ஊர்வசி யோஇவள்தான் உள்ளூரில் மெல்லப்பூந்
தேர்போல் அசைந்து தெருவில் தினம்வருவாள்
கார்குழல் காற்றிலாட கண்கள்கா தல்பேச
யார்கொடுத்து வைத்த வனோ
----இன்னிசை
ஊர்வசி யோஇவள்தான் உள்ளூரில் மெல்லப்பூந்
தேர்போல் அசைந்து தினம்வருவாள் -- பார்பார்பார்
கார்குழல் காற்றிலாட கண்கள்கா தல்பேச
யார்கொடுத்து வைத்த வனோ ?
----நேரிசை

