என் இனிய மணவாளனே

என் கண்களின் கருவிழியே ...
அழகின் திருவுருவே ...
கனவில் கண்டவனே..
காவிய நாயகனே ..
கடல் அலை போல் பொங்கும்
பாசத்தை அளிப்பவனே...
சிரிப்பு என்னும் பொக்கிக்ஷத்தின்
சொந்தக்காரனே ...
கண்ணுக்கினியாளின் கண்ணுக்கினியனே..
என் சோகத்தில் பங்கெடுத்து
பாசத்தில் தோல் கொடுப்பவனே..
சிங்கார வேலரின் தீவிர பக்தனே..
என் உள்ளம் கொண்ட கள்வனே ...
உன்னை அனுதினமும் என்னும்
எண்ணம் எனக்கு தந்தவனே ..
என் அன்பு கணவனே ..
ஆருயிர் செல்வனே ...
என் இனிய மணவாளனே ...

எழுதியவர் : பிரியா (15-Mar-19, 2:48 pm)
பார்வை : 441

மேலே