Yuvatha - சுயவிவரம்

(Profile)எழுத்தாளர்
இயற்பெயர்:  Yuvatha
இடம்:  kovai
பிறந்த தேதி :  31-Dec-1994
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  16-Jul-2018
பார்த்தவர்கள்:  164
புள்ளி:  53

என் படைப்புகள்
Yuvatha செய்திகள்
Yuvatha - திருமகள் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
20-Feb-2020 5:47 pm

சிட்டுச்செல்ல சிட்டு
சிணுங்கும் நல்ல மொட்டு
செல்ல நடைப் போட்டு
சிரிக்கும் மலர்க்கட்டு

அப்பாவுக்கு ஆறு
அம்மாவுக்கு நூறு
அமுதமுத்தம் கொடுத்து
ஆளையே மயக்கும்

கண்ணாலே சிரிக்கும்
கவலைகளைத் துரத்தும் கற்கண்டாய் இனிக்கும்
காக்க வைத்தால் உதைக்கும்

சிரித்து நம்மை மயக்கும்!
சிணுங்க மனம் துடிக்கும்!
அன்பாலே அணைக்கும்!
ஆசையாக அடிக்கும்!

மழலைச்செல்வம் பாரடா!
மனமகிழ்ச்சி நாடடா!
குழலை ஊதிக் கேளடா!
குழவிக்குரல் இனிதடா!

மக்கட்செல்வம் தானடா!
மற்றச்செல்வம் ஏனடா?
மகிழ்ந்து பாட்டு பாடடா!
மயங்கி நடனம் ஆடடா!

கவலைநூறு இருப்பினும்
மழலைமொழி கேட்கையில்
மயக்கம் கொண்டு நாமுமே
மறந்திடுவோம் நாளையே...

மேலும்

அழகு....... 22-Feb-2020 11:29 am
அருமையான கவிதை நடை ! பாராட்டுக்கள் கவிஞரே . 20-Feb-2020 11:04 pm
Yuvatha - சஅருள்ராணி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
03-Jul-2019 8:31 pm

காதல் மயக்கம்
கல்யாண கிறக்கமானதால்,
காணாது காத்திருக்கும் - என்
கண் அவரை கண்டிடவும்,
கணவராய் கைக்கோர்த்திடவும்,
கண் மலர்ந்து காத்திருந்தேன் !

காலம் கரைந்தோட ,
கணநேரம் கடினமாகி ,
கடிகாரமும் முள்ளுடைந்து ,
காலிழுத்து நடந்திட ,
கன்னியுள்ளம் உடைந்து
கண்ணீர் வழிந்தோடியது !

காற்றோடு துள்ளித்திரிந்த
கண்ணியவள் கண்ணீர்க்கண்டு ,
கையளவு மேகமும் கனமாகி
கார்முகிலாகி , கடினம்தாளாது ,
கவலை மேலோங்க
கண்ணீர் மழையாய் பொழிந்தது !

கவியாய் பொழியும் மழை இன்று ,
கவலையாய் பொழிவதைக்கண்டு ,
கவியவளும் கண்ணீர் துடைத்து
கைநீட்ட , தொட்ட மறுகணமே
கரைந்து களிப்பாய்,
கண்ணீர் கவியாய் மாறி நனை

மேலும்

நன்றி தோழரே .. 28-Aug-2019 9:56 pm
நன்றி அண்ணா ... 28-Aug-2019 9:56 pm
நன்றி .. 28-Aug-2019 9:55 pm
அருமை........ 15-Jul-2019 12:40 pm

தடாகத்து நீர் மட்டம் மேல்
அழகிய நீண்ட பசுமைத் தண்டு
அதன்மேல் அலர்ந்த சிவப்பு தாமரைப்பூ
தண்டால் அதன் அழகு கூடியதா இல்லை
தண்டின் அழகை வெளிப்படுத்துதோ தாமரைப்பூ
அதுபோல் என்னவள் நீண்ட சங்கொத்த கழுத்து
அதன்மேல் இருக்கும் வட்ட வட்ட சிவந்த முகம் கழுத்தால் இவள் முகத்திற்கு

மேலும்

மிக அருமையான படைப்பு........ 06-Jun-2019 4:21 pm
மிக்க நன்றி கவி கவின் சாரலன் தங்கள் பாணியில் அமைந்த வரிகளில் தாமரையின் மெல்லிய சுகந்தம் வீசுது 06-Jun-2019 10:18 am
அருமை அழகிய வருணனை. தண்டொத்த சங்குக் கழுத்து மதிமுகமோ தண்பொழில் தாமரைப் பூ ! 06-Jun-2019 9:06 am
Yuvatha - பிரியா அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
11-Apr-2019 3:36 pm

தனிமை வாழ்வின் ஓர் அங்கம்
தனிமை வாழ்வின் ஓர் உணர்வு
தனிமையில் இனிமை ஓர் சுகம்
இனிமையில் தனிமை ஓர் வரம்

ஆனால் இனிமையில் தனிமை
காணமுடியாது ...
அது தான் தனிமையின் தனித்துவம் ...
வாழ்க்கையில் சில மணி நேரம்
தனிமை இனிக்கும் ...
வாழ்க்கையில் பல மணி நேரம்
தனிமை கசக்கும் ...

வாழ்க்கை தத்துவத்தில் வாழ்ந்து
தான் பார்க்க வேண்டும் தனிமையை ..
தனிமையில் சுகம் காண இனிமை தேவை...

தனிமையின் நண்பன் கற்பனை
கற்பனையின் ஊற்று தனிமை ...
இவை இணைபிரியா இரட்டையர்கள் ...

சுமைகளை இறக்கும் இடம் தனிமை ...
இனிமைகளை நினைக்கும் இடம் தனிமை .
தனிமை இல்லையேல் இனிமை இல்லை ....
இனிமை இல்லையேல் தனிமை உண்டு ....

மேலும்

மிக்க நன்றி ... 02-Jun-2019 4:22 pm
மிக அழகானபடைப்பு .......... 27-May-2019 10:10 am
தங்கள் பார்வைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி ..... 17-Apr-2019 10:48 am
உண்மை தான் பல நேரங்களில் தனிமை கொடுமை 17-Apr-2019 5:07 am
Yuvatha - படைப்பு (public) அளித்துள்ளார்
22-May-2019 11:49 am

என் உணர்வுகளின் இலக்கியமே.....
என்னில் பூத்த காதல் கவிஅமுதே.....

மாதம் பத்து சுமந்தாலே தாய்மை எனும் உலகம்
நானோ இங்கு உன் நினைவுகளை சுமக்கும் தாயும் ஆனேன்......

என் உணர்வுகள் அனைத்திற்கும் நீயே கருவாக......
நானும் இங்கு தாயுமானேன்........

கார்மேகக் கண்ணன் களிப்பெடுக்க...
வானமகள் வண்ணக்கோலமிட்டு
காவிரியும் இங்கு காதல் கொண்டால்
மண்ணின் மனம் கொண்டு முத்துகுளிக்க.......

அதுபோலத்தான் எந்தன் காதலும்
உந்தன் நினைவுகள் என்னில் முத்துக்குளித்திடவே....
எந்தன் உணர்வுகள் உன்னை கருவாக என்நெஞ்சில் சுமக்கிறது.......

விந்தும் இல்லா விந்தையாக...
என்னில் உதித்த காதல் கருவே......

மேலும்

தங்கள் கருத்திற்கு மிக்க நன்றி தோழரே....... 23-May-2019 10:58 am
மிகவும் அருமை... 23-May-2019 6:51 am
Yuvatha - படைப்பு (public) அளித்துள்ளார்
20-May-2019 5:53 pm

மனம் நாடும் மணவாளனே...!
கண் இமைக்குள் கனவானவனே...!

உன் காந்தப்பார்வையில்
இப்பாவையும் மயங்கியதை நீ அறியாயோ...?

செவ்விதழோரம் நாணம் சிவந்திடவே....
இப்பேதையும் உணர்தேன்.... காதல் என்றே...!

உந்தன் விழிகளுக்குள் சிறைகொள்ள
கங்கணம் கட்டிய என் நிமிடங்கள்
மறைமுகமாகவும் கூறவில்லையே.......

எங்கனம் அறியேன்....?

இக்கனம் அனைத்தும் கனவாய் போக.........

மேலும்

Yuvatha - படைப்பு (public) அளித்துள்ளார்
13-May-2019 3:06 pm

என் ஒட்டு மொத்த அகங்காரத்திற்கும்
முற்றுப்புள்ளியாய்...........

உன் ஒற்றைத்திலகம்
என் நெற்றிச் சுட்டில்.........

மேலும்

நன்றி தோழி.. 14-May-2019 12:13 pm
அருமை.... 14-May-2019 11:13 am
Yuvatha - படைப்பு (public) அளித்துள்ளார்
06-May-2019 10:16 am

சூரியனின் ஒளியும் தீண்டாமல்
சந்திரனின் ஒளியும் வருடாமல்

தண்ணீர் பந்தலில் தாகம் காணாமல்
குருதியும் வெளிக்கன்டிலேன் மாயக்கண்ணனே.....

மனதை துளைத்து விதையும் விதைத்து
ஆலமரமாய் பற்றிக்கொண்ட
கோபியர்களின் மன்னனே.......

மார்கழியாய் ஒருபொழுது குளிரவும் செய்கிறாய்
சித்திரைதிங்களாய் மறுபொழுதே வாடவும் செய்கிறாய்........

இம்சிக்கும் நொடியுமிங்கு இனிமையே என்றுரைப்பேன்
ராதையின் கள்வனே................

மேலும்

மிக்க நன்றி தோழரே....... 07-May-2019 10:23 am
காதல் இலக்கிய படைப்புக்கு பாராட்டுக்கள் 06-May-2019 10:00 pm
Yuvatha - சகி அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
02-Aug-2018 5:14 pm

வயது முப்பத்து எட்டை கடந்தாயிற்று ,
குருதியின் வேகம் குறைந்தாயிற்று,
இளமை பருவமோ இறுதியாயிற்று,
சிந்தையில் கொஞ்சம் தெளிவாயிற்று ,
வாழ்க்கையின் பாதியோ முடிந்தாயிற்று ,
தேடிய பாதையோ தொடர்ச்சியாயிற்று ,
மூப்பினை உணர்ந்திட முடி நரை கூடிற்று ,
தூரத்து காட்சிகள் திரைபோட ,
மூக்குக்கண்ணாடி அணிந்தாயிற்று,
பொருள் தேடலிலே காலங்கள் இறந்தாயிற்று,
சுகபோக பொருள்களாலே உடல் சோர்வாயிற்று ,
வாழ்க்கைமுறை மாற்றத்தால் வாழ்வியல் நோய் சேர்ந்தாயிற்று.

பால்குடி பருவகால ஞாபக சாத்தியமற்று ...
பாலர்பள்ளி ஞாபகங்கள் வந்தோடிற்று ,
ஒருசில சூழல்கள் கடக்கும்போது
அதை ஒத்த ஞாபகங்கள் வாசனைபோல் குறுக்கிடாயிற்ற

மேலும்

Nandri thozi 03-Aug-2018 6:37 am
அருமை 👌 03-Aug-2018 4:50 am
Mikka nandri... 02-Aug-2018 7:57 pm
மிகச் சிறப்பு...... உண்மை உணர்த்தும் உணர்வு கலந்த அழகிய படைப்பு......... 02-Aug-2018 7:14 pm
Yuvatha - Yuvatha அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்
16-Jul-2018 8:42 pm

மிஞ்சிய அண்ணம்
குப்பையைத் தழுவ
பிஞசு மழலை
கையேந்தும் நிலை....
-வறுமை

மேலும்

தங்களின் வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி தோழமையே............ 01-Aug-2018 9:08 am
சென்ற வாரத்தின் சிறந்த படைப்புகளின் தொகுப்பு ஒரு பார்வை - எழுத்து.காம் தேர்வான தங்கள் படைப்புக்கு பாராட்டுக்கள் 31-Jul-2018 2:09 pm
Yuvatha - Yuvatha அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
17-Jul-2018 10:39 am

கவிதையின் கருவில் தறித்த கருவே உந்தன் கருவில் கருவாய் வளர்ந்திடும் வரம் வேண்டும்......

மேலும்

மிக்க நன்றி தோழி 18-Jul-2018 9:32 pm
நன்றி தோழி.... 18-Jul-2018 9:31 pm
நன்றிகள் தோழி... 18-Jul-2018 9:30 pm
அழகான கற்பனை வாழ்த்துக்கள் தோழி 17-Jul-2018 4:57 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (17)

ஷிபாதௌபீஃக்

ஷிபாதௌபீஃக்

பொள்ளாச்சி
user photo

வெங்கடேசன்

செஞ்சி
கவிஞர் செநா

கவிஞர் செநா

புதுக்கோட்டை, தமிழ்நாடு
பாலா தமிழ் கடவுள்

பாலா தமிழ் கடவுள்

உங்களின் இதயத்தில்

இவர் பின்தொடர்பவர்கள் (20)

ஆரோ

ஆரோ

விழுப்புரம்,(சென்னை)

இவரை பின்தொடர்பவர்கள் (18)

மேலே