காதல் கணவா.........

விழிகள் பேசிய மொழிகள் யாவும்
இனி இதழ்கள் படிக்கும் காவியம் ஆகும்........
தேடலின் நாட்கள் யாவும்
இனி ஊடலின் நாட்கள் ஆகும்.........
நெற்றியில் இட்ட திலகமும்
இங்கு உன்னோடு உரிமைக்கொள்ளும்........
என் கூந்தலில் சூடிய மலரும்
இனி உன் ஆடையின் மணமாய் வீசும்.........
எந்தன் முகவரி இங்கு
உந்தன் நிழல் சொல்லும்........