கலையோடு ஒப்பிட்டால் பெண்ணோவியம் நீ

கலையோடு ஒப்பிட்டால் நீயொரு ஓவியம்
சிலையோடு ஒப்பிட்டால் பல்லவனின் சிற்பம்
அலையோடு கவிபாடும் கூந்தலோர் அந்திராகம்
விலையில்லா நித்திலம் விளைநிலம்உன் புன்னகையோ !

---------கலிவிருத்தம்

கலையோடு ஒப்பிட்டால் பெண்ணோ வியம்நீ
சிலையோடு ஒப்பிட்டால் பல்லவச் சிற்பம்
அலையோடு பாடுமுன் கூந்தலந்தி ராகம்
விலையிலாமுத் தோபுன்ன கை !

----ஒரு விகற்ப இன்னிசை வெண்பா

எழுதியவர் : கவின் சாரலன் (19-Jun-20, 10:03 am)
பார்வை : 114

மேலே