மைவிழியாள்

கருமை நிற மதியோ அவள்....!
என் கருப்பு வண்ணக் கவியும் அவள்.....!

மைதீட்டாக் கரு மைவிழியாள் பேசும் மொழிகள் தான் எத்தனையோ.....
காந்தம் தான் அவள் மொழி எனக்கு....., மை விழி எனக்கு......

சிற்றிடையோ...! மெல்லிடையோ...!
அதில் தாளமீட்டும் கருங்கூந்தல்... ...
கம்பன் மறந்த கவியோ.....!

இதழ் உதிர்க்கும் புன்னகைக்குள் மழலை முகம் மறைத்துவைப்பாள்.....
சுட்டெரிக்கும் சூரியனையும் சிலநேரம் விழிகளுக்குள் காட்டிநிற்பாள்.....

எத்தனைதான் அவள் அழகம்மா....!
சொற்களும் சொக்கித்தான் நிற்குதம்மா.....
இணையில்லா பேரழகே....! பைங்கிளியாள் என்னழகே....!

எழுதியவர் : yuvatha (19-Jun-20, 11:48 am)
சேர்த்தது : Yuvatha
பார்வை : 358

மேலே