வெங்கடேசன் - சுயவிவரம்

(Profile)எழுத்தாளர்
இயற்பெயர்:  வெங்கடேசன்
இடம்:  செஞ்சி
பிறந்த தேதி :  01-Feb-1994
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  22-Aug-2018
பார்த்தவர்கள்:  389
புள்ளி:  146

என்னைப் பற்றி...

நான் கணிதத்தில் முதுகலை பட்டம் பயின்று ..தற்பொழுது கல்வியலில் இளநிலை பட்டம் பயின்றுகொண்டு இருக்கிறேன்..பெரும்பாலானோர் போலவே தமிழ் ஆர்வம் உண்டு ...

என் படைப்புகள்
வெங்கடேசன் செய்திகள்
வெங்கடேசன் - படைப்பு (public) அளித்துள்ளார்
24-May-2019 11:15 am

எனக்கு வந்த உலகம்
இன்ப தமிழ் சுரங்கம்.
கணக்கும் உண்டு வாழ்வில்
கவலை இல்லை மொழியில்.

பிறக்கும் நாள்கள் என்றும்
புது பாடமாகி போட்சு.
பறக்கும் கோள்கள் வாழ்வில்
இருப்பை சேர்த்து போட்சு.

வரும் வாழ்வை எண்ணி
மனதில் வாழ்த்து மடல் செய்தேன்.
நான் குறித்த நாளில் வாழ்வும்
வழக்கம் போல வரவில்லை.

தேற்றி தேற்றி பார்த்தேன்
மனமும் மகிழ வில்லை-பின்
இன்பம் வாழ்வு என்று
வார்த்தையில் ஊற்றி வைத்தேன் .

மேலும்

வெங்கடேசன் - வெங்கடேசன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
22-May-2019 8:57 am

காதல் காற்று வீசுதே!
கவலை மாறி போகுதே !
சாதல் வரை நீ என்று
சலனம் இன்றி பேசுதே !

கண்ணிமைகள் அசைவதெல்லாம்
நம் காதலுக்கு தாலமன்றோ!
பெண்ணரசி உன் மனமோ-என்னை
தனிமை தந்த சிறையன்றோ!

கனவுகள் வரும் வழியெல்லாம்
காதல் தந்த பாதையன்றோ!
மனபுனைவுகள் நாம் கொண்டாலும்
மௌன காதல் முதல் ஆகும்!

காதலே காதல் என்று
கனிந்து நான் மொழிந்திடவே!
ஆவலே தொடர்ந்து வந்து
பூவில் நாம் நடைபயில்வோம்.

மேலும்

தங்கள் கருத்துக்கு மிக்க நன்றி அண்ணா ..நானும் எழுத்து பிழை சரிசெய்ய முயற்சிக்கிறேன் ..ஆனால் பிழை செய்து விடுகிறேன் ... 24-May-2019 10:55 am
கவிதை அழகு எழுத்துப் பிழையை சரி செய்யுங்கள் 22-May-2019 11:46 am
வெங்கடேசன் - படைப்பு (public) அளித்துள்ளார்
22-May-2019 8:57 am

காதல் காற்று வீசுதே!
கவலை மாறி போகுதே !
சாதல் வரை நீ என்று
சலனம் இன்றி பேசுதே !

கண்ணிமைகள் அசைவதெல்லாம்
நம் காதலுக்கு தாலமன்றோ!
பெண்ணரசி உன் மனமோ-என்னை
தனிமை தந்த சிறையன்றோ!

கனவுகள் வரும் வழியெல்லாம்
காதல் தந்த பாதையன்றோ!
மனபுனைவுகள் நாம் கொண்டாலும்
மௌன காதல் முதல் ஆகும்!

காதலே காதல் என்று
கனிந்து நான் மொழிந்திடவே!
ஆவலே தொடர்ந்து வந்து
பூவில் நாம் நடைபயில்வோம்.

மேலும்

தங்கள் கருத்துக்கு மிக்க நன்றி அண்ணா ..நானும் எழுத்து பிழை சரிசெய்ய முயற்சிக்கிறேன் ..ஆனால் பிழை செய்து விடுகிறேன் ... 24-May-2019 10:55 am
கவிதை அழகு எழுத்துப் பிழையை சரி செய்யுங்கள் 22-May-2019 11:46 am
வெங்கடேசன் - படைப்பு (public) அளித்துள்ளார்
17-May-2019 6:48 pm

உள்ளே செல்ல மறுக்கிறது அட
எண்ணம் ஏனோ மறுக்கிறது.
சுயமாய் இருக்க மறுக்கிறது அட
உள்ளம் ஏனோ மறுக்கிறது.

கள்ளம் தானே உதிக்கிறது.
வெள்ளம் பேல அழிக்கிறது.
அருணை நாதன் கருணை பெருகியே!
உனை நெஞ்சில் நிறுத்த அருளுவையோ!

மேலும்

நன்னாடன் அளித்த படைப்பில் (public) Nannadan5bd809bd54563 மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
13-May-2019 12:43 pm

எதுவரும் உன்னோடு இறுதி வரை - என்று
அதை எண்ணியோர் இவ்வுலகில் எவர் எவரோ
பண்ணால் பல பாடல் பாடிவிட்டால்
பின்னால் அது தொடரும் என எண்ணலாமோ

துன்பத்தை தொடராக செய்து வந்து
துதித்து இறையின் புகழ் பரப்ப செயல் செய்து
அடுத்து வரும் சில காலந்தோறும்
அப்பழுக்கற்ற செயல் செய்தால் இறுதி வருமோ

எந்நாளும் இறைவனின் நாமம் சொல்லி
உடல் எங்கெங்கும் அவனுடைய குறியை இட்டு
குறையாமல் செல்வத்திற்கு சூடங்காட்டி
குதுகலித்து வாழ்ந்து வந்தால் அது கூட வருமோ

பட்டங்கள் பதவிகள் பல பல பெற்று
சட்டங்கள் திட்டங்கள் திறம்பட செய்து
யுத்தங்களில் யோகங்களில் வெற்றிகள் குவித்தாலும்
கற்ற வித்தைகள் எல்லாம் கடைசி வரை வருமோ

மேலும்

திரு வெங்கடேசன் அவர்களின் கருத்திற்கும் அருமை பார்வைக்கும் நன்றிகள் பல பல. 14-May-2019 2:43 pm
பற்றி தொடரும் பாவ புண்ணியமே ..என்ற பட்டினத்து அடிகள் வார்த்தை ஞாபகம் வருகிறது ..யார் அறிவார் அவன் மனதை ,,,, 14-May-2019 2:00 pm
திரு சக்கரை கவியின் அற்புத பாராட்டுதலுக்கு சிறப்புற பார்வையிட்டதற்கும் நன்றிகள் பல பல. 13-May-2019 3:54 pm
நம் வாழ்வினில் நாம் செய்த அறம் சார்ந்த அல்லது அதைச் சாராத வகைகளே நம்முடன் கூட வரும் வேறொன்றும் வாராது . இது நம் முன்னோர்கள் முதல் இன்றுவரை உள்ள நம்பிக்கை . நன்று நன்னாடரே 13-May-2019 2:47 pm
நன்னாடன் அளித்த படைப்பில் (public) Nannadan5bd809bd54563 மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
13-May-2019 6:03 pm

தொடர்வண்டி நிலையத்தில் குடிநீர் இல்லை
பேருந்து நிலையத்தில் இலவச கழிவறை இல்லை
காவல் நிலையத்தில் முறையான விசாரணை இல்லை
கண்காணிக்க உரிய காவல் கண்காணிப்பாளர் இல்லை

கல்விக் கூடங்களில் சரியான மாணவர்கள் இல்லை
கடமையை செய்ய நல்ல அரசு ஊழியர்கள் இல்லை
தரமான சாலைகள் தடந்தோறும் இல்லை
தனியாக செல்லக் கனந்தோறும் தொல்லை

எதுக்கும் எவற்றிற்கும் பணமே பெரும் எல்லை
எச்செயலும் தடுமாறும் கேட்பின் பணம் என்ற சொல்லை
ஒருவாறு இயங்குது பூமி என்ற உருண்டை
அறிந்து தெளிந்த மாந்தருக்கு அனைத்திலுமே கொள்ளை .
- - - நன்னாடன்.

மேலும்

பார்வையிட்டு சிறப்பாய் கருத்திட்ட திரு. வெங்கடேசன் அவர்களுக்கு நன்றிகள் பல பல. 14-May-2019 2:41 pm
பெரும்பாலும் பொருந்துகின்றது ...அழகான கவிதை ..சமூக சிந்தனை ...அருமை அண்ணா 14-May-2019 1:48 pm
தங்களின் சிறப்பான பார்வைக்கும் அருமை மிகு அசத்தல் கருந்திற்கும் நன்றிகள் பல நூறு திரு. சக்கரை கவி அய்யா அவர்களே 14-May-2019 5:27 am
எல்லாம் இருக்கிறது ஆனால் முழுமையாய் இல்லை . நடைமுறை சரியில்லை கல்விக் கூடங்களில் "கலவி "த் தொல்லை கடமையைச் செய்ய அரசு இயக்கம் கொள்ளை தார்ச்சாலை போடாமலே அடிப்பது கொள்ளை தனியாய்ப் போகையில் நகைப்பு பறிப்புக் கொள்ளை இவ்வாறான செயல்களுக்கு எல்லையே இல்லை .நல்லதோர் பதிவு நன்னாடரே 14-May-2019 12:20 am
சக்கரைவாசன் அளித்த படைப்பில் (public) sakkaraivasan மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
14-May-2019 12:56 am

அந்த நாள் ஞாபகம்
*************************************

மாடுகட்டிப் போரடிச்ச களத்துமேட்டு நிலமெல்லாம்
வீடுகட்டி நாறடிக்கும் அடுக்குமாடி குடிலாச்சு !

கூடுகட்டி இனம்பெருகும் குருவிவகைக் கூட்டமெல்லாம்
நாடித்தேடி மரங்களின்றி வீட்டுக்குள் பூந்திருச்சு !

காடுவெட்டி கழனிகண்ட வெள்ளாமைப் பெரியோர்கள்
கடன்கட்ட வழியின்றி தற்கொலையே முடிவாச்சு !

பாடுபட்டு உழைத்திட்ட நம்நாட்டு மனிதவளம்

மேலும்

பார்த்து படித்து ரசித்த மருத்துவருக்கு மிக்க நன்றி . இச் சிறியோனின் ஏக்கத்தை வழிமொழிந்ததற்கு கோடானு கோடி நன்றிகள் 14-May-2019 2:04 pm
பார்த்து படித்து ரசித்த வெங்கடேசன் ஐயா அவர்கட்கு மிக்க நன்றி 14-May-2019 2:02 pm
மிக்க சுவையான கவிதை அய்யா ...அனைத்து வரிகளும் மிக்க அருமை அய்யா ... 14-May-2019 1:45 pm
அருமை ..சந்தம் துள்ளுகிறது .. கருத்துக்களின் கோர்வை . யதார்த்தமான வார்த்தைகள் .நல்ல சமூகப் பார்வை .. என்னாச்சு ஏதாச்சு எப்படிங்க இப்டியாச்சு முந்தையநாள் இருந்ததெல்லாம் மீண்டுமினி வராதோ ! ,,,,,, இந்த ஏக்கம் எல்லோர் நெஞ்சிலும் தான் .. 14-May-2019 11:56 am
வெங்கடேசன் - படைப்பு (public) அளித்துள்ளார்
14-May-2019 9:07 am

காலமெல்லாம் கவலை கொள்ளும் மனமே!
கோலமெல்லாம் திவலை போல மாயும்.
ஆலமுண்ட் சிவனை எண்ண மனமே !
நாளும்கண்ட மயக்கம் தீரும் கனமே!

எண்ணம் என்னும் கடலில் வீழ்ந்து தினமே!
வண்ணம் இழந்து காட்சி காட்டும் மனமே!
எண்ணம் மாய இனிமை தோய மனமே!
மண்ணை அள்ள சென்ற சிவனை படிவோம்.

மேலும்

தங்கள் கருத்துக்கு மிக்க நன்றி அண்ணா ...மனம் கலங்குவதால் எழுதிய வரிகள் அண்ணா ... 14-May-2019 1:38 pm
எண்ணம் என்னும் கடலில் வீழ்ந்து தினமே! வண்ணம் இழந்து காட்சி காட்டும் மனமே! - தோதான வரிகள். மனதினைக் கட்டுப்படுத்த இயம்பிய " பா" அருமை. 14-May-2019 10:42 am
வெங்கடேசன் - நன்னாடன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
13-May-2019 9:54 am

காமம் வந்ததா? முதலில் காதல் வந்ததா?
அறிவில் வந்ததா? இல்லை மனதில் வந்ததா?

அப்பழுக்கானது என்று சொல்லும் பெருமை பெற்றதா?
அனைத்துயிரும் அறிந்து கொள்ளும் நடுமையானதா?

உரிய போது உயிரை காக்கும் உன்னதமானதா?
ஒருதலையாய் உரிமை கோரி உயிரை கொல்வதா?

செல்வம் உள்ள மனிதருக்குள் சேர முடியாததா?
சினங்கொண்டு கவர்ந்து வந்து சேர முயல்வதா?

கனந்தோறும் மனமதனை பிதற்றச் செய்வதா?
கணக்கற்று எதிர்பாலினத்தை சிதைக்கத் துணிவதா?

பிணக்கு வர சுரக்க வைக்கும் காமக் காதலை
பிறக்கும் உயிருக்கு காட்டாமல் விரட்டி அடித்திடுவோம்.
- - - நன்னாடன்.

மேலும்

அருமையாய் பார்வையிட்டு அற்புத கருத்திட்ட அய்யா திரு. சக்கரை கவிக்கு நன்றிகள் பல நூறு. மேலும் கருத்திட்டு உற்சாகப் படுத்துங்கள் நன்றி. 14-May-2019 5:35 am
அருமையான பதிவு . தற்கால மனிதரிடத்தில் வருவது காமமும் அல்ல காதலும் அல்ல . அதெல்லாம் இலக்கிய காலத்தில் தலைவி தலைவன் உறவுகள் காதல் களவு காமம் இவை யாவையும் சரியான பாதையில் இருந்தது . தற்போது உடலில் கொழுப்பு சேர சேர அதனுடைய தூண்டுதலால் வருகின்ற புணர்ச்சி எழுச்சி . அருமையான புனைவு. இது மாதிரியான நிகழ்வுகள் நம் அடுத்த சந்ததியற்கு நேராமல் இருக்கக் கடவது என்ற தங்கள் சம்மோக அக்கறை மிகவும் நன்று நன்னடரே 13-May-2019 2:44 pm
பார்வையிட்டு கருத்திட்ட திரு வெங்கடேசன் அவர்களின் சிறந்த கருத்திற்கு நன்றிகள் பல பல 13-May-2019 11:50 am
"பிணக்கு வர சுரக்க வைக்கும் காமக் காதலை பிறக்கும் உயிருக்கு காட்டாமல் விரட்டி அடித்திடுவோம்" அருமை அண்ணா .. 13-May-2019 11:37 am
வெங்கடேசன் - நன்னாடன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
06-Feb-2019 10:38 pm

நெடும் பகை அகல நின்நெடும்
அடியை பற்றி அல்பகல் தோறும்
ஆற் றொன துயரம் களைந்திட
அரவம் சூடிய அண்ணலை ஏத்துவம்

அன்பது அவியாப் பண்பதை பெறவும்
ஆற்று மளவுக்கே துன்ப மதுநிறையவும்
அல்லல் களைந்து நல்லவை பேணவும்
விரிஇருள் பகையை வென்ற வனையேத்துவம்

கங்கை சிரசில ணிந்த கார்மேகனே
கண் ணியமிக்க கடுந் தவத்தனே
உண் ணினில் கலந்தே உறைந்தேனே
பண் ணிசைப் பாடபலந் தருவாயே !
__ நன்னாடன்

மேலும்

ஆலகால விஷம் அருந்தியதால் அவன் உடல் கரு நீலமாய் மாறியதாக கூறப்படுவதால் , கார்மேகன் என்று விளித்துள்ளேன் மற்றபடி தவறு எனில் மாற்றிக் கொள்கிறேன் திரு வெங்கட் அவர்களே பார்வைக்கும் கருத்துக்கும் நன்றி பல . 07-Feb-2019 6:48 pm
ஆலகால விஷம் அருந்தியதால் அவன் உடல் கரு நீலமாய் மாறியதாக கூறப்படுவதால் , கார்மேகன் என்று விளித்துள்ளேன் மற்றபடி தவறு எனில் மாற்றிக் கொள்கிறேன். ஐயா வாசுதேவன் தேசிகாச்சாரி அவர்களே பார்வைக்கும் கருத்துக்கும் நன்றி பல. 07-Feb-2019 6:47 pm
நண்பரே , கார்மேகம் என்று திருமாலைதான் படுவர்..... கண்ணன், ராமன் இவர்கள் நிறம் கருமையை சிவனை அப்படி போற்றியதாய் நானறியேன்... இருக்கலாம் தெரியாது ...... மற்றபடி அற்புதமான புனைவு இறைவன் மேல்..... அவர் உமக்கு பண்ணிசைத்துப்பாட பலம் தர நானும் வேண்டுவேன் .. வாழ்த்துக்கள் நன்நாடன் 07-Feb-2019 12:51 pm
அற்புதம் அற்புதம் ..சிவபெருமான் நிறம் பவளம் ..எனவே "கங்கை சிரசில ணிந்த கார்மேகனே " இன்பத்திற்கு பதிலாக "கங்கை சிரசில ணிந்த கருணைமேகனே" என இருந்தால் எப்படி இருக்கும் 07-Feb-2019 9:43 am
வெங்கடேசன் - வேலாயுதம் ஆவுடையப்பன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
31-Jan-2019 2:55 pm

எண்ணியதையெல்லாம் ஈடேற்றும் விநாயகர் காரிய சித்தி மாலை காஷ்யப முனிவர் வடமொழியில் இயற்றி, கச்சியப்பரால் தமிழில் மொழி பெயர்க்கப்பட்ட விநாயகர் காரிய சித்தி மாலை, ஓர் ஒப்பற்ற மந்திரம்.
எந்தப் பணியை ஆரம்பித்தாலும் விநாயகரைத் தொழுதுவிட்டே ஆரம்பிப்பது ஆன்மிகர்களின் வழக்கம். எந்த விஷயத்தையும் எழுதுமுன் குட்டியாக ஒரு பிள்ளையார் சுழி போட்டுவிட்டு எழுதத் தொடங்குவதும் பலருக்கு வழக்கம்.
விக்னமில்லாமல் முடிய வேண்டிய எந்த வேலைக்கும் விக்னேஸ்வரரின் அருள் கட்டாயம் வேண்டும். அன்றன்றைய கடமைகள் என்றில்லாமல், வாழ்நாள் முழுவதும் மகிழ்ச்சி பொங்கவும் எதிர்ப்படும் பிரச்னைகளை எளிதாகக் கையாளவும் முறையாகத் திட்டமிடவு

மேலும்

சைவம் -வைணவம் போற்றுவோம் சைவமும் வைணமும் என்ற நூல் இப்போது படிக்க வாங்கியுள்ளேன் மீண்டும் பக்தி இலக்கியம் மலர இறைஅருள் வேண்டுவோம் தங்கள் பார்வைக்கும் உடனடியாக கருத்திட்டமைக்கும் மனமார்ந்த நன்றி 31-Jan-2019 6:36 pm
நன்றி, நன்றி நண்பரே அவுடியாப்பன்.வேலாயுதம் நானும் தாங்கள் சேர்த்த இவ்விநாயகர் காரிய சித்தி மாலையை , முதல் முறையாய் ஒருமுறைப்படித்தேன் நான் வைணவன்தான், ஆயினும் விநாயகரை தினமும் முதற்கண் தொழுபவன் என் இஷ்ட தெய்வம் கணபதி. நன்றி இதை சேர்த்தமைக்கு இதை இயற்றி நமக்களித்த கச்சியப்ப முனிவருக்கு தெண்டம் சமர்ப்பிக்கின்றேன் 31-Jan-2019 5:28 pm
அருமை அய்யா...வினை தீர்க்கும் ஆண்டவனின் பாடல் ... 31-Jan-2019 4:20 pm
வெங்கடேசன் - சக்கரைவாசன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
06-Jan-2019 8:05 pm

சேக்கிழாரின் அழகிய வர்ணனை- - - -(திருத்தொண்டர் புராணம் - - - தடுத்தாட்கொண்ட பகுதி
*****************************************************************************************************************************

கற்பகத்தின் பூங்கோம்போ காமன்தன் பெருவாழ்வோ
பொற்புடைய புண்ணியத்தின் புண்ணியமோ புயல்சுமந்து
விற்குவளை பவளமலர் மதிபூத்த விரைக்கொடியோ
அற்புதமோ சிவனருளோ அறியேன் என்றதிசயித்தார் !
( நால்வரில் ஒருவரான சுந்தரரின் செயல் )

மேலும்

பெண்ணின் மென்மை பாராட்டும் சேக்கிழார் புயலைச் சொல்லியிருப்பாரா ? கயல்சுமந்து என்றிருக்குமோ ? டாக்டர் கன்னியப்பனிடம்தான் கேட்கவேண்டும் . 08-Jan-2019 9:21 am
thangal பார்வைக்கும் கருத்துக்கும் நன்றி. புயல் சுமந்து _= மேகத்தை தன மேலே சுமந்த காற்றைக் கூறுகிறன்றார் .மேகத்தை மேலே சுமந்து கொண்டும் வில், நீலோற்பவம் , பவளம் , தாமரைஆகியவை பூத்திருப்பதுடன் மதியும் (நிலவு ) பூத்த கொடியிடையாள் என்கிறார். இது நான் புரிந்துகொண்ட வரை . 08-Jan-2019 9:08 am
திருச்சுற்றில் தன்தலை சுற்றச் செய்த பரவை அழகில் மயங்கிய சுந்தரரைப் பற்றிய வரிகள் . இதில் புயல் சுமந்து என்று எதைக் குறிப்பிடுகிறார் சேக்கிழார் ? 07-Jan-2019 7:07 pm
தமிழ் ஆன்மீக இலக்கிய தேன் அமுது ஆன்மீக நூல்கள் பல படித்துள்ளேன் அறுசுவை விருந்து சேக்கிழார் புராணம் நாம் அனைவரும் படிக்க வேண்டிய நூல் இயற்கை அழகு வர்ணனைகள் தங்கள் படைப்புக்கு தமிழ் அன்னை ஆசிகள் தொடரட்டும் சேக்கிழார் புராணம் 06-Jan-2019 8:50 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (6)

நன்னாடன்

நன்னாடன்

விழுப்புரம்
user photo

சக்கரைவாசன்

தி.வா.கோவில்,திருச்சி
Yuvatha

Yuvatha

kovai
saisuganya

saisuganya

srilanka

இவர் பின்தொடர்பவர்கள் (6)

user photo

சக்கரைவாசன்

தி.வா.கோவில்,திருச்சி
பாலா தமிழ் கடவுள்

பாலா தமிழ் கடவுள்

உங்களின் இதயத்தில்

இவரை பின்தொடர்பவர்கள் (6)

பாலா தமிழ் கடவுள்

பாலா தமிழ் கடவுள்

உங்களின் இதயத்தில்
saisuganya

saisuganya

srilanka
user photo

சக்கரைவாசன்

தி.வா.கோவில்,திருச்சி
மேலே