சக்கரைவாசன் - சுயவிவரம்
(Profile)


தமிழ் பித்தன்
இயற்பெயர் | : சக்கரைவாசன் |
இடம் | : தி.வா.கோவில்,திருச்சி |
பிறந்த தேதி | : 13-Sep-1951 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 22-Jul-2015 |
பார்த்தவர்கள் | : 2796 |
புள்ளி | : 1873 |
ஓய்வு பெற்ற இந்தியன் வங்கி ஊழியர்.
ஆசிரியபபா
மதமும் சாதியும் மறுக்கும் நாய்க்கு
வேறு நாட்டான் மதம்வளர மகிழ்ச்சி
சாதி கெட்டவன் ஊரின்
சான்றோன் ஆனக் காரணம் கிளருவாய்
குறள் வெண்பா
மானத்தை மறந்தவன் ஊரின் பெரியவனாம்
ஈனர் பழமொழிக்கே ளிங்கு
......
நேரிசை வெண்பா
தரமாய் பயின்றிடு யாப்பை புனைவாய்
தரமாய்க் கவிதை தமிழில் -- உரமாய்
தருவாய் கவிதை அருமை தமிழில்
விரும்பி யெதையும் எழுது
பச்சைத் தமிழன் என்றால் யாப்பைப் பயின்று பலவகையிலும் பாக்கள் எழுது.
பயித்தியங்கள் போல கிறுக்கி கவிதை என்று சொல்லாதே. மானக்கேடு
காலத்தில் காப்பாய் கனிந்து
**"***"
ஆலமுண்டு தேவரினம் காத்த பரமனே
காலிடையில் காலனைக் கண்டவனே ---
--- ஞாலத்தில்
பாலகரைச் சுட்டெரிக்கும் பாதகங்கள்
கண்டழித்துக்
காலத்தில் காப்பாய் கனிந்து !
காலத்தில் காப்பாய் கனிந்து
**"***"
ஆலமுண்டு தேவரினம் காத்த பரமனே
காலிடையில் காலனைக் கண்டவனே ---
--- ஞாலத்தில்
பாலகரைச் சுட்டெரிக்கும் பாதகங்கள்
கண்டழித்துக்
காலத்தில் காப்பாய் கனிந்து !
காலத்தில் காத்திடுவாய் பார்
********
ஆலமுண்டு தேவரினம் காத்திட்ட பரமனே
காலிடையில் காலனைக் கண்டவனே ---
--- ஞாலத்தில்
பாலகரைச் சுட்டெரிக்கும் பாதகங்கள்
கண்டழித்து
காலத்தில் காத்திடுவாய் பார் !
பாசறையில் பறையறைவித்தல்
7144 பூசலே; பிறிது இல்லை எனப் புறத்து
ஆசை தோறும் முரசம் அறைந்து என
பாசறைப் பறையின் இடம் பற்றிய
வாசல் தோறும் முறையின் வகுத்திரால்! 1
- முதற்போர் புரி படலம், யுத்த காண்டம், கம்பராமாயணம்
இதை வாசிக்கும் கவின் சாரலர் உட்பட கவிஞர்கள் பலரும் முயற்சி செய்யலாம், சீர்களை ஒழுங்கு படுத்தி, தக்க வாய்பாடுடன், என்ன வகைப்பாடல் என்றும் இலக்கணக் குறிப்புகளும் தரவேண்டும். அவலோகிடம் தளத்தையும் பயன்படுத்தலாம், அவலோகிதம் சரியாகப் பெரும்பாலும் வழிகாட்டுவதில்லை.
நா எழுதும் பொழுது, கணினியில் தட்டச்சு செய்து, எழுத்து, சொற்கள், சீர்களை எப்படி வேண்டுமானாலும் மாற்றம் செய்து கொள்ளல
வித்திடும் கல்கியே இத்தரை காத்திடு
********
பத்தவ தாரமும் பத்தாதென் னய்யனே
பத்தராய் சித்தராய் பங்கிடும் ஆசிகள்
புத்தனைப் போலுளர் போலிகள் பாரினில்
வித்திடும் கல்கியே யித்தரை காத்திடு
*****
(யாப்பிலக்கணம் முழுமையாக
அறியாயதால் முயற்சி கவிதை
என்றே குறிப்பிடுகிறேன்)
தலைவனும் தலைவியும்
********
கூந்தலது தென்றலுடன் உறவாட
காந்தவிழி ஓடைதனில் கயலாட
பாந்தமுடன் நாயகியும் பந்தியிட
சாந்தமுடன் இல்லமதில் தலைமகனும் !
நேரிசை ஆசிரியப்பா
(இது ஒழுகிசை அகவல் ஓசை)
முயற்சி விட்டு குட்டி சூட்டிகை
யொதுக்கி கவித்தமிழ் நினைக்கா காலி
டப்பா வாகி வெற்றுப் பேச்சு
வெறும்கிறுக் கலென தமிழில் பாட்டென
வெளியே சொல்லுதல் நகைப்பு நீயும்
கம்பனோ புகழேந் திப்புல வனோசொல்
வள்ளுவப் பெருந்தகை யாவையோ
மூடனே தமிழை முடமாக் கிடாதே
நேரிசை ஆசிரியப்பா அன்பது குணமெனின் அறனது பயனாம் வாலிபத் தவசி காட்டுசன்யா சிதிக்கற்றோர் அநாதையின் பிணமதைப் புதைத்தல் ஏழைக்கு உதவல் பிதுர்கடன் புதுவிருந் தோம்பல் சுற்றம் தன்னில் பகிர்ந்துண்டு அறநெறி இல்வாழ்வோன் துறவியி னுமுயர்ந்தோன் பரமனை வணங்க பரலோகம் போக தேவரின் மேலாம் பாரே
.......
கேட்காத குயிலோசை
*******************************************
ஆவிபோல் அலைகின்ற நிலவணிகக் கூட்டத்தார் -- நற்
பாவிய மாந்தோப்பு பலவற்றை சாய்த்திடவே
தாவியே விளையாடும் கானகத்துக் குயிலினங்கள்
கூவியே அழைத்திடும் தருணங்கள் அற்றதுவே !
ஏற்றிடுமோ அச் " சாமியதும் "
********************************************************
( தற்கால ஆலய குடமுழுக்கு விழாக்கள் - - - ஒரு பார்வை )---
*****************
செந்தேளும் கரும்பாம்பும் சேர்ந்தே நல்வாழச்
செல்லரித்த உத்திரங்கள் ஒன்றொன்றாய் கீழவிழப்
பொந்துகளின் உள்புகுந்து குஞ்சுகள் புடைசூழ
வந்தாளும் எலிகளதன் கூடாரமாய் மாறிவிட்ட
நந்தியுடன் காட்சியுறும் வ