சக்கரைவாசன்- கருத்துகள்

அருமை அருமை. அபிராமியிடம்
வேண்டுகோள். நன்றி ஐயா

தங்களின் வருகைக்கும் பார்வைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி தோழமையே

ஐயா அவர்கட்கு காலை வணக்கம்
சூழ்நிலை மற்றும் நேரத்திற்கு தகுந்த பதிவு. நன்றி ஐயா

ஐயா அவர்கட்கு வணக்கம் தங்களின் வருகைக்கும் பார்வைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி ஐயா

ஐயா அவர்கட்கு வணக்கம். இது கலிவிருத்தம்
போலவே உள்ளது. ஏதோ சிறிது மாறுதல் செய்ய
கொச்சகக் கலிப்பா ஆகிறதோ. முயற்சி செய்து
பார்க்கிறேன் நன்றி ஐயா

அருமையான பதிவு ஐயா
கன்னம் குழிவிழும் கனியே
மின்னும் ஒளிதனில் மதியே
சொன்னால் புரியுமோ? சுடரே,
என்றும் உனதெழில் சிறப்பே!
(மா விளம் மா ---- முதற்சீர்கள் தேமா
இரண்டாம் சீர்கள்
கருவிளம்
மூன்றாம் சீர்கள் புளிமா

ஐயா அவர்கட்கு
தங்களிடம் யாப்பு பற்றி கருத்து
சொல்ல எனக்கு அருகதை இல்லை
என நினைக்கிறேன். நன்றி.

ஐயா அவர்கட்கு காலை வணக்கம்
தங்களின் வருகைக்கும் பார்வைக்கும் கருத்துக்கும் திருத்தம் கொண்டு
அருளியதற்கும் மிகவும் நன்றி ஐயா

ஐயா அவர்கட்கு காலை வணக்கம். அருமையான பதிவு.
" படிப்பறியாப் பாமரனும் " என்றும்
பதியலாமோ?
நன்றி ஐயா

ஐயா அவர்கட்கு வணக்கம். தங்களின் வருகைக்கும் பார்வைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி ஐயா

ஐயா அவர்கட்கு வணக்கம் தங்களின் வருகைக்கும் பார்வைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி ஐயா

ஐயா அவர்கட்கு வணக்கம். பொருள் தெரியவில்லை ஐயா
. தயவுசெய்து கூறுங்கள். நன்றி

எழுத்துத் தோழமைகளுக்கு வேண்டுகோள்
பிழை பொறுக்கவும்.
கட்டளைக் கலித்துறைப் பதிவில்
நாயினை ஓரங் கடத்தி மகிழ்வர் என்பதை
தாயினை ஓரங் கடத்தி மகிழ்வர்
என்று திருத்திப் படிக்கவும். நன்றி

ஐயா அவர்கட்கு காலை வணக்கம்.
அருமையான எனை ஈர்த்த பதிவு.
சேக்கிழார் காவியத்திற்கு ஒப்பிலா பக்தர்
வேண்டும்
அதனால் தான் அக்காவியத்தை
திருத்தொண்டர் புராணம் என
வைத்தனரோ.
நன்றி ஐயா

ஐயா அவர்கட்கு காலை வணக்கம் தங்களின் வருகைக்கும் பார்வைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி ஐயா

ஐயா அவர்கட்கு காலை வணக்கம். தங்களின் வருகைக்கும் பார்வைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி ஐயா

ஐயா அவர்கட்கு வணக்கம். ஆனைக்கா அண்ணலை வைத்துப் புனைந்த பாடல்
மிக அருமை. கோவிலை நீயுய்யத் தேடு
என்று தாங்கள் பூர்த்தி செய்ய எனக்கு
சுந்தரமூர்த்தி சுவாமிகள் பதிகம்
" மறைகளாயின நான்கும் .......... எனத்
தொடங்கும் பாடலும்

ஞானசம்பந்தர் அருளிய
" மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம்
....... எனத் தொடங்கும் தேவாரப் பாடலும்
என் நெஞ்சில் நிழலோடுகிறது.

ஆனைக் காவுறை அண்ணலை நினைத்திட
ஏனை யயின்னலும் இலாதநி லையுறும்!
வானைக் கேட்பினும் வரமது கிடைத்திட
ஆனைக் காவுறை அகிலம வளருளே!

ஐயா,
தங்களின் வருகைக்கும் பார்வைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி. வணக்கம்

ஐயா அவர்கட்கு வணக்கம்.
கவலை வேண்டாம் ஐயா :-
கலிவிருத்தம் :- விளம் மா காய் விளம்

வேலனைப் போற்றும் வேல்மாறல் துதித்திட
காலனும் நம்மைக் காணாது ஒதுங்குவன்
ஆலடி ஆர்ந்த ஆசானை நினைத்திட
ஓலமிட் டோடும் ஓயாத வினைகளே !

நேரிசை ஆசிரியப்பா :-
வேலனை நினைத்து வேல்மா றல்தனை
அனுதினம் கருத்தொடு துதித்து நிற்க
காலனும் ஒதுங்கி ஓடியே மறைவன்!
ஆலமர் கடவுளை நினைக்கவே
தடமின்றி அழியும் வாட்டிடும் வினைகளே !

குறள் வெண்பா :-

வேதனைக்கு மாறலோதி நற்கதி சேர்தர்க்கு
வேதனைச் சார்ந்து உருகு ;

வேல்மாறல் :- முருகனைப் போற்றும் துதி
ஆலடி ஆர்ந்த : ஆலமரத்தடியில் அமர்ந்த
சிவன்
வேதனைச் சார்ந்து :- வேதநாயகன் சிவன்

விளக்கம் :-
நீடூரன் = நீடூர் என்ற தலம் மேவிய சிவன்
குன்றத்தான் = குன்று தோறும் அமர்ந்த முருகன்


சக்கரைவாசன் கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே