கொலுசை அணிவிக்க கையினில் உந்தன் மலர்பாதம் வைத்தபோது

கொலுசை அணிவிக்க கையினில் உந்தன்
மலர்பாதம் வைத்தபோது மென்பாதம் நொந்திட
வெல்வெட்டை கைமேல் விரித்தேன்நான் நோகாமல்
மெல்லச் சிரித்துநீ மெல்ல நடந்தபோது
மெல்லிய உன்கொலுசு மெல்ல ஒலித்திடயென்
சொல்லிலு மேகொலுசோ சைகேட் குதடிவெண்
மல்லிகை மேனிவண்ண மே

எதுகை--- கொலு மலர்-- ஒருவிகற்பம் வெல் மெல் மெல் சொல் மால் ---இன்னொரு விகற்பம்

இருவிகற்ப ஏழு அடி பஃறொடை வெண்பா

மோனை 1 3 ஆம் சீரில் ---கொ கை ம மெ வெ வி மெ மெ மெ மெ சொ சை ம மே

எழுதியவர் : கவின் சாரலன் (14-Nov-24, 10:36 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 28

மேலே