புரிதலின் பிழையோ காதல்

புரிந்தே நேர்ந்தக் காதலிது
புகைச்சலில் முடிந்துப் போக
புலம்பியே நானும் கேட்கிறேன்
புரிதலின் பிழையோ இந்த காதல்?

புன்னகை ஜாலம் செய்திடும்
பூவையின் முகம் பார்க்கும்வரை
புதைக்கொண்டு இருந்ததோ?
புரியாத காதலும் என்னில்

புலரும் கதிரின் விடியலிலும்,
பொங்கிடும் நிலவின் மடியினிலும்,
புதுப்புது கதைகள் தினமும்பேசி
பொழுதும், நாளும் போக்கினோம்

பந்தலில் தோரணம்கட்டி
பட்டாடை சேலைக்கட்டி
புதுமணப் பந்தமொன்றில்
புவிவாழ்வில் நாமும் பிணைந்தோம்

தாலிசூடிய நாள்முதலாய் - என்
தாயவளை தள்ளிவைக்க
தாரகை நீயும் தினம்
தலையணை மந்திரம் ஓதுகிறாய்

புதையல் தருவாயென்றே
பூஜைக்கு அழைத்துவந்தவள்
புதைக்குழி தந்துப்போனால்
புவியில் இது புரிதலின் பிழையோ?

எழுதியவர் : நா. தியாகராஜன் (12-Nov-24, 6:43 pm)
சேர்த்தது : TPRakshitha
பார்வை : 103

மேலே