சரித்திர குப்பை சிரிக்க
சரித்திர குப்பை சிரிக்க
சொர்க்க பூமி சொந்தங்கள் சோதனைக் குழாய்குள் புக
சொகுசாய் தாம் மட்டும் வாழ வேண்டி
சில்லரை மூட்டையில் பொய்களை
சிம்மாச எஜமானுக்கு கையூட்டாக பரிசளிக்க
வெள்ளை ராஜா இளவரசு வாரிசு
பக்கத்து ராணிக்கு பரிவட்டம் ஏறுது !
இடரிய கால் எட்டி உதைக்கும் உறவு சார்
கபோதிகள் யாரென்று பார்க்கையில்
நாடு விட்டு ஓடிவந்த நானோடி கூட்டம்
வாழ்வாங்கு வாழ வந்தவழி போக்கனுக்கு
பண்பாடு களிப்போடு கலாச்சாரம்
எழுதபடிக்க முதுமொழி களஞ்சியம்
முச்சமுத்திரம் சிம்மாசன புத்தாக்கம் பதிவேற்றம் என
பாங்காக சுந்தரமாய் எடுத்துயம்ப
நிலையான சரித்திர சான்றை
வேண்டியவார் சாதகமாக சாதூர்யமாக விசித்திர
சரித்திர புதுப்பானையில் பொடம் போடும் செயலானது
குருடன் செவிடன் கண்டெடுத்த உண்மை உரைக்க ஊமை
சுவர்ண பூமியில் மரமேறி வழுக்கிவார் மாயாவித்தையை
பலவார் யோசிக்கிறார் , யாசிக்கிறார் பரிசோதிக்கிறார்…
வந்தவழி மறந்து , மறுத்து வாழவைத்தவர்களை மறித்து
தான் மட்டும் வாழ மதயானை சவாரி செய்ய…
மிதியானை மதியானை மதயானை தும்புறுத்தி
புதுநாமம் ஓங்க வந்தேரி துறக்க வேண்டும் சிலதை….
பதிவில் உள்ள சரித்திரத்தை
கதை திருப்பி திருத்தி எழுதிய புது சிரிக்கும் குப்பையை
சிகரமாய் அயலானும் அகிலமும் ஏற்க !