காதல் என்ற காமம்

எடுத்தவுடன் ஆடைகளை களைகிறாய்.
ஒவ்வொன்றாய் தோலுரித்தல் என்பது அதீத கலை..
அதை என்னை முறையாக செய்ய விடு.

உன் காமமேறிய கண்களை
வெறித்துக் கொண்டே,
அங்கங்களை
ரசித்துக் கொண்டே,
ஸ்பரசிங்களை
சீண்டிக்கொண்டே,
உன் வேண்டுதல்களை
புறக்கணித்துக் கொண்டே,
பூத்துக்குலுங்கும் வெட்கத்தை
நிராகரித்துக் கொண்டே,
களைய வேண்டும் உன் ஆடைகளை.

வெறும் நிர்வாணத்தில் என்ன இருக்கிறது.
வெற்றுடம்பில் காமத்தை பார்க்க ஒன்றுமில்லை.
அது வெறும் சதை..
அவ்வளவே.

வம்சத்தை விரிவாக்கவோ,
நான் ஆண்மையுள்ளவன் என்பதை ஊர் உலகுக்கு தெரியபடுத்தவோ,
இரவுக்கு இது ஓர் கடமை என்பதற்காகவோ,
நீ என்னைவிட்டு வெளியே சென்றுவிடக்கூடாது என்பதற்காகவோ
உன்னை நெருங்க வில்லை.
இது உணர்வு..

எடுத்து கொள்வதும்
எடுத்து தருவதும்
உள்ளுக்குள் அடங்குவதும்
உள்ளார சென்று சுவைப்பதும்
படர்ந்து புணர்வதும்
புணர்ந்து கொண்டே காதலை
வெளிப்படுத்துவதும் கடவுளின் தரிசனம்..

நாம் அவ்வரத்தை முழுதாக அனுபவிக்க வேண்டும்..
நீயெனக்கு
நானுனக்கு என்பதை இவ்விடயத்தில்
முழுதாக பின்பற்ற வேண்டும்..
அள்ளி எடுத்து உச்சி முகர்ந்து
உன் பெண்மையை எனக்கு சூட்ட வேண்டும்.
என்னுள்ள பெண்மையை நீ வெளிகொணர்ந்து உன் அடிமையாக்க வேண்டும்..

கட்டிலில் ஆண் ஆணாகவும்
பெண் பெண்ணாகவும் இருப்பதில் என்ன சுவராஸ்யம்.
மூச்சுரைத்து வெற்றி கண்டவுடன்
கலவியில் இருந்ததை விட மும்மடங்கு
என்னை உன் சேயாக தத்தெடுக்க வேண்டும்.
இதில் வென்றார் உண்டோ என்ற
தத்துவத்தை நாம் உடைக்க வேண்டும்.
அது நம்மால் மட்டுமே முடியும் ‌....

எழுதியவர் : Ruban (19-Jan-25, 10:45 pm)
சேர்த்தது : Ruban puviyan
Tanglish : kaadhal entra kamam
பார்வை : 5

மேலே