தண்டமிழ்ப் பாவையாய் பெண்ணெழில் நீ வந் தாய்

வண்டிசைக் கும்வசந்த வண்ணமலர்ப் பூந்தோட்டம்
எண்டிசை எங்கும் எழில்கொஞ்சும் பூமலர்கள்
தண்டிலாடும் செவ்வண்ணத் தாமரை பூசிரிக்க
கண்டெழில் வான்கதிரோன் கையசைத்து வாழ்த்திட
தண்டமிழ்ப் பாவையாய் தாமரையும் தோற்றுநாண
பெண்ணெழில்நீ அங்கேவந் தாய்

எழுதியவர் : கவின் சாரலன் (12-Nov-24, 2:07 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 28

மேலே