வணங்காது ஒடுக்கிடுவோம் -- தரவு கொச்சகக் கலிப்பா

வணங்காது ஒடுக்கிடுவோம் -- தரவு கொச்சகக் கலிப்பா
******************
குடிப்பதற்கு வழிவகுத்துக் குடிமகனை அடிமையாக்கி ;
படிப்பதற்கு அமைத்திட்ட படிப்பகங்கள் முழுவதுமே,
குடிப்பழக்கம் தடம்பற்றும் கொடுமையது பெருகிடற்கு ;
வடிவமைத்த அரசியலை வணங்காது ஒடுக்கிடுவோம்!

விளக்கம் : குடிமகனை = சிடிஸன்ஸ், நாட்டின் பிரஜைகள்
படிப்பகங்கள்= பள்ளி மற்றும் கல்லூரி

(அனைத்து சீர்களும் கலித்தளை பயின்று வந்துள்ளது)
ஒன்று மற்றும் மூன்றாம் சீர்களில் பொழிப்பு மோனை
அடி எதுகை)

எழுதியவர் : சக்கரைவாசன் (25-Mar-24, 6:53 pm)
சேர்த்தது : சக்கரைவாசன்
பார்வை : 42

மேலே