மதிப்புமிகு குடிப்பெருமை மயங்காது காப்பாயே - கொச்சகக் கலிப்பா

தரவு கொச்சகக் கலிப்பா

அதிகரிக்கும் குடிப்பழக்கம் அறிவுதனை மயக்குதையா;
குதூகலித்துக் குடிப்பதனால் கூரறிவும் மழுங்குதையா!
எதிருரைத்தே எவரையுமே இளக்காரஞ் செய்யுதையா;
மதிப்புமிகு குடிப்பெருமை மயங்காது காப்பாயே!

- வ.க.கன்னியப்பன்

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (24-Mar-24, 7:05 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 24

மேலே