மதிபாலன் - சுயவிவரம்
(Profile)

எழுத்தாளர்
| இயற்பெயர் | : மதிபாலன் |
| இடம் | : காஞ்சிபுரம் |
| பிறந்த தேதி | : |
| பாலினம் | : ஆண் |
| சேர்ந்த நாள் | : 26-Dec-2015 |
| பார்த்தவர்கள் | : 903 |
| புள்ளி | : 307 |
வாசனைகளால் பேசும் மலர்களைப் போல புன்னகையை வீசும் இதயங்களைப் பிடிக்கும் பூகம்பங்களுக்கும் அசையாத மலைகளாக நேசங்களை சிந்தும் நெஞ்சங்களைப் பிடிக்கும் அன்பினால் கட்டிப்போடும் அதிசயங்களைப் பிடிக்கும் சந்திக்காமலே சங்கமிக்கும் சொந்தங்களைப் பிடிக்கும் !--மதிபாலன்
எதிரெதிரே தொடரிகள்
எதிரெதிரே அருகருகே
அவனும் அவளும்
காட்சி பிம்பமாயவள்
கண்ணீர் தெப்பமாயவன்
அவனின் நினைவலைகள்
அவளுள் வளர்ப்பிறைகள்
அவளின் உணர்விழைகள்
அவனிதயத்தை துளைத்தன
பல முறைகள்
பெண்ணின் வலிகள்
கண்ணீர் துளிகள்
ஆணின் மௌனம்
ஊமை மொழிகள்
உலவும் புலனம்
நகரும் தொடரிகள்
தளரும் முளரிகள்
தகருமா இடறுகள்
பாராட்டை நிறுத்தி விட்டால்
படைப்பு சுரப்பதில்லை!
வாசிப்போர் இல்லையென்றால்
எழுத்து மலர்வதில்லை!
யார்குறித்தும் நினைக்காமல்
இயங்குவோன் கர்மயோகி!
உண்மையை உணர்ந்துகொண்டால்
அவனும் கடவுளும்
பாதி பாதி!
பாராட்டை நிறுத்தி விட்டால்
படைப்பு சுரப்பதில்லை!
வாசிப்போர் இல்லையென்றால்
எழுத்து மலர்வதில்லை!
யார்குறித்தும் நினைக்காமல்
இயங்குவோன் கர்மயோகி!
உண்மையை உணர்ந்துகொண்டால்
அவனும் கடவுளும்
பாதி பாதி!
விளக்கிவிட முடியாது
அனைத்தையும்
சில விளைவுகளும்
அப்படித்தான்
கண்ணாடிப் பெட்டிக்குள்
அடைபட்டிருக்கும் சிற்றெறும்பு
வானத்தை
வளைத்துவிட்டதாய்
நம்பிக்கொள்ளட்டுமே
உண்மை புரியும் வரைக்கும்
தீர்ப்பெழுதும் விரல்களுக்கு
விலங்கிட்டு விட்டதாய்
நினைத்துக்கொள்ளட்டுமே
சோப்பு நுரைகள்
நஷ்டமென்ன ?
விதிகள் மாறும்போது
செயலிழந்து போவதை
தவிர்க்க இயலாமல்
தவிக்கட்டுமே
கண்ணியில் மாட்டிய
வல்லூறுகள்
உறைந்து உடையும்வரை
சிரித்துக்கொள்ளட்டுமே
உறைபனியில் சிக்கிய
நரிகளின் பற்கள்
விளக்கிவிட முடியாது
அனைத்தையும்
சில விளைவுகளும்
அப்படித்தான்
இதயம் வழியுது தெரியுதா
பார்வையிலே பார்வையிலே
இமைகள் நடனம் புரியுதா
காதலிலே காதலிலே
திக்கி திணறுது
வார்த்தையெல்லாம்
காதலை சொல்லிடவே
பக்கம் பக்கமாய்
நினைத்ததெல்லாம்
மறந்து போனதடி
கனவில் என் கனவில்
உன் கால்தடம் தெரியுதடி
புரியாமல் நீபேச
முரண்டு பிடிக்குதே ராத்திரிகள்
உன்வாசம் நான்பிடிக்க
ஊடல் கொள்ளுதே பூச்செடிகள்
கனவின் வாசனையாய்
நீளும் உன் நினைவு
கவிதை தூறலிலே
வளரும் நம் உறவு
இரவென்ன பகலென்ன
இதயம் பறக்கும் பறக்குமே
உன்னைத் தேடியே ....
(இசைப் பாடல் )
இப்போதெல்லாம் என் உடலில் ஒரு பிணத்தின் வாடை அடிக்கிறது உங்களுக்கு தெரியுமா..
ஆம்.. என் உடலில் ஒரு பிணம்
இருக்கிறது..
கால்கள் மண்டியிட்டு
கைகள் கூப்பி மன்னிப்பு
கோரிய நோக்கில் மரணித்திருக்கிறது அது..
அதன் கசந்த மனம் சுமந்த வெம்மை இன்னும் என்னை தகிக்கிறது...
நான் கேட்க
துணியாத மன்னிப்பை ஒரு சிலுவையென
சுமந்த நொடியில் மரணம் நேர்ந்தது அதற்கு...
-வித்யா
மலர்களின் உரசல்கள் விளைத்த பூகம்பம்
பறவைகள் மிதித்தபோது கசங்கிய பாறை
வரிசை எறும்புகள் மீது
மலைகளை தழுவிய காற்று நிகழ்த்திய
வன்போர் காதல்...
புதுவெளியின் பெருவெளிச்சம்
ஆதி மரத்தின் நிழலில் உதித்த உயிர்...
உலகின் முதல்மழை காதல்...
வனங்களில் எச்சமிடும் பறவை
மலர்களில் முயங்கும் வண்டு
இயற்கையின் புணர்ச்சி காதல்...
-வித்யா சிவலிங்கம்
காலை நேரம்
வீதியை பெருக்கி
கழுவிக் கொண்டிருந்தான்
சோலை
"என்ன காலங் காத்தால
மந்திரி வாராகளா " என்றாள்
"ஆமா சுந்தரி நீ வாரேயிலே
அதான் " என்றான் சோலை
"என்ன கிண்டலா ...
கொஞ்சம் கைல தண்ணி ஊத்து "
என்றாள் அஞ்சலை
"எதுக்கு பல் தேச்சு குளிக்கவா "
ன்னு டயூப்பினால் தண்ணி விட்டான்
"ஆமா பிச்சை எடுக்குற பொழைப்புக்கு
பல் தேச்சு சீவி முடிச்சு சிங்காரிச்சுகிட்டு
நிக்கனமாக்கும்
ஏய் ஏய் நிறுத்து ஒடம்பெல்லாம்
நனைச்சுப் புட்டியே சீ "
"அட கோயிச்சுகாத அஞ்சலை
ட்யூப் திரும்பிடிச்சு நா என்ன செய்வேன்
அந்தா பாரு அங்க பையில புது சேலை எல்லாம்
எடுத்து வச்சிருக்கேன் மரத்துக்குப்
காற்றுக்கும்
கடலலைக்கும்
வேலி போடுவேன்
கடல் மணலில்
நீ நடந்து வந்த உன்
பாதசுவடுகளை
சிதையாமல் பாதுகாக்க...