ஸ்பரிசன் - சுயவிவரம்

(Profile)தமிழ் பித்தன்
இயற்பெயர்:  ஸ்பரிசன்
இடம்
பிறந்த தேதி
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  15-Feb-2018
பார்த்தவர்கள்:  2211
புள்ளி:  1380

என்னைப் பற்றி...

நிறைய இருக்கு...அப்பறமா பேசலாம்.

என் படைப்புகள்
ஸ்பரிசன் செய்திகள்
ஸ்பரிசன் - படைப்பு (public) அளித்துள்ளார்
13-Apr-2021 12:01 pm

(ஓர் அறிவிப்பு...

இந்த கதை என் சொந்த படைப்பு அல்ல. இலியிச் எழுதியதாக நம்பப்படும் ஒரு நாவலின் நடுவில் இடைச்செருகலாக வந்து இருக்கும் சிறுகதை இது என்று நம்பத்தகுந்த எனது இலக்கிய நண்பர்கள் மூலம் இப்போது தெரிய வருகிறது.
ஒருவேளை பதிப்புரிமை தொந்தரவு எழுப்பப்பட்டால் நான் இந்த கதையை நீக்கி விடுவேன். இந்த கதைக்கு நானே என் மனம் போன போக்கில் ஒரு தலைப்பு வைத்தேன். உங்களுக்கு பிடித்த தலைப்பை நீங்களும் வைத்து கொள்ளலாம்.)

இனி கதை.

==================

இருக்கட்டும்.

அதனாலென்ன?

என்னை இன்று எப்படியேனும் கொல்ல வேண்டும் என்ற ஆத்திரம் உங்களுக்கு. இப்படி நீங்கள் ஒன்றுகூடி

மேலும்

ஸ்பரிசன் - படைப்பு (public) அளித்துள்ளார்
12-Apr-2021 5:24 pm

காற்றுக்குள் சுழலும்
ஒலித்துகள்களில்
காற்றினை சுழற்றும்
ஒளித்திரள்கள்...
சிறு சிறு
பட்டாம்பூச்சிகள்.

மௌனத்தின் விஷமெடுத்து
இரவை திரிக்கும் நான்.

இரவுக்குள் சாய்ந்தாடும்
அவள் நிழலின் நிழற்படம்.

காற்றை குடித்து என்
கனவை புசித்து
நத்தையாய் நகரும் உயிருக்குள்
நின்று தடுமாறும் நினைவில்
சாய்ந்தாடும் நிழற்படத்தின் நிழல்.

ஒலியில் மோதிய
ஒளியின் கண்கள் கண்டு
துணுக்குறும் இரவுக்குள்
விழிப்புறும் அச்சிறு
பட்டாம்பூச்சிகள்...

பட்டாம்பூச்சி சிறகசைப்பில்
ஒலியை சுழற்றும் வளி.

வளிக்குள் சுழலும்
ஒளியின் நிழலில் விரிந்த
அப்பகலில் அவள்...=================××××××××××××====

மேலும்

இங்கே கருத்துப் பக்கம் சகாரா பாலைவனம் . நம்மைப்போல் சிலர்தான் அதை பசுமையாக்கிக் கொண்டிருக்கிறோம் 13-Apr-2021 11:01 pm
உடனுக்குடன் பதில் தர முடியவில்லை. விளம்பர ஆதிக்கமும் மிக அதிகம். கருத்து கலம் திறக்கவும் மறுக்கிறது இங்கே.... 13-Apr-2021 10:37 pm
ஸ்பரிசித்தேன் ஸ்பரிசனின் கவிதையை ரசித்தேன் அழகிய தலைப்பை . நிறமான இரவுகள் ----அவள் கனவாக விரிந்ததால் .... 12-Apr-2021 7:31 pm
ஸ்பரிசன் - ஸ்பரிசன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
09-Mar-2021 9:53 am

பறவைகளின் கானம்
கேட்கும் செவிக்குள்
சிந்தும் பிரபஞ்சம்.

மேலும்

விரிவான பதில் தர விரும்புகிறேன். ஓரிரு நாட்களில் சொல்கிறேன். ஏனெனில் அதற்கு நான் படிக்க வேண்டும். படிக்க தூண்டி இருக்கிறது உங்கள் விமரிசனம்.🙏🙏💐💐💐 12-Mar-2021 6:04 pm
ஹைக்கூவின் இலக்கணமெல்லாம் நான் கேட்கப்போவதில்லை . ஜாப்பனீய இலக்கணத்திற்கு தமிழில் கவிதையா ?ஹைக்கூ உலக மொழிகளில் எல்லாம் உரைக்கவிதைக்காரர்கள் செய்யும் போலிப்பாவனை. பாஷோ எனும் ஜப்பானிய ஹைக்கூ கவிஞரின் ஆங்கில மொழிபெயர்ப்பு வரிகளை அல்லது SO CALLED ENGLISH HAIKKOOS களை கருத்தழகு பார்த்து தமிழில் குறும்பாக்களாக தந்திருக்கிறேன் விரும்பினால் சொடுக்கிப்பாருங்கள் . இப்பொழுது ONE LINE HAIKOO என்றும் ஆங்கிலத்தில் எழுதுகிறார்கள் வாய்க்கு வந்ததெல்லாம் கோதைக்குப் பாட்டு என்றாகிவிட்டது இதை குறும்பாவாகக் கொண்டு உங்கள் உரைக்கவிதைக்கு (PROSE POEM ) கருத்துரைக்கிறேன் இலக்கணம் சாரா வரிகளை நான் எழுதினாலும் நீங்கள் எழுதினாலும் உரைக்கவிதையே . பாரதியின் வசன கவிதைதான் இதற்கு முன்னோடி . வசன கவிதை என்று அழைத்தால் இளப்பம் என்று புதுக்கவிதை என்று புதிய பெயரை சூட்டினார்கள் உரைநடைக்காரர்கள் . ஆனை வாலாட்டுகிறதே என்று ஆட்டுக் குட்டி வாலாட்டுகிற கதையாய் போயிற்று போகட்டும் உங்கள் குறும்பாவிற்கு வருகிறேன் பறவைகளின் கானம் கேட்கும் செவிக்குள் சிந்தும் பிரபஞ்சம். ----இனிமையான வரிகள் கண்ணனை மண்ணைத் தின்றாயா என்று தாய் யசோதை அதட்டும் போது வாய் திறந்தான் கண்ணன் பிரபஞ்சம் தெரிந்தது . பாகவதக் கதை. கேட்டிருப்பீர்கள் கண்ணனின் குழலிசையோ வேறு தெய்வீக கானமோ மொசார்ட் பீத்தோவன் மும்மூர்த்திகள் கானமோ நம்ம MSV இளைய ராஜா இசையோ செவிவழி புகின் பிரபஞ்சம் சிந்தவே செய்யும் பொருள் அற்புதம் . செந்தமிழ் நாடெனும் போதினிலே இன்பத் தேன்வந்து பாயுது காதினிலே என்ற பாரதியின் வரியை நினைவு படுத்தியது . இவ்வரியை ஒரு கதாசிரியர் வேலை மெனக்கிட்டு வந்து விமர்சித்ததை ல ச ரா குறிப்பிட்டிருந்தார் பாராட்டுக்கள் . பகிர்ந்து ஐந்து நட்சத்திரம் அளிக்கிறேன் பி கு : கானம் பிரபஞ்சம் ----ஓசை ஹைக்கூ இலக்கணத்தை மீறுகிறது 09-Mar-2021 11:18 am
ஸ்பரிசன் - படைப்பு (public) அளித்துள்ளார்
12-Mar-2021 6:01 pm

ஒரு நவீன
ஜென் பெண் துறவி
கவிதை எழுதுகிறார்.

அவர் முன்

சிறு தட்டொன்றில்
சில பிஸ்கெட் துணுக்குகள்.

அத்துணுக்குக்களை நோக்கி
வரும் செவ்வெறும்புகள்.

துறவியின் முன்னிருக்கும்
காகித தாள்களில்
புகுந்து சிரித்து சிதறும்
காற்றுக்குலைகள்...

காகிதங்கள்
அங்குமிங்குமாய் பரவ

தட்டில் சுழன்று சுழன்று
உண்ணும் எறும்புகள்
சிறு அதிர்ச்சி கொள்கின்றன.

துறவி பின் எழுதுகிறார்.

தட்டில் எறும்புகள்.
தட்டுக்குள் எறும்புகள்.
தட்டை சுற்றிலும்
சில எறும்புகள்.
தட்டை நோக்கி வரும்
எறும்புகளுக்கு
தட்டிலிருக்கும் எறும்புகள்
ரகசியமாய் சொல்வது...

இங்கு மட்டுமே
எறும்புகளை சுற்றிலும்
தட்

மேலும்

எறும்பைப்பற்றி எழுதினால் ஜுவாலஜி தாவரத்தைப் பற்றி எழுதினால் பயாலஜி ஜென் கவிதைகள் எல்லாம் சைக்காலஜிதான் மனதத் தொடும் .. 14-Mar-2021 11:11 am
எறும்புகள் தட்டு சரி கடைசிவரையில் மனிதனை சொல்கிறாரா பெண் துறவி மனிதன் ஒரு கபளீகர எறும்பு அவன் முன்னே எத்தனை தட்டு எத்தனை டிஷ் ? இந்தப் பெண் கணவனுக்கு தட்டுத்தட்டாய் உணவு வைத்து அலுத்துச் சலித்து துறவியாக மாறியிருக்கக் கூடும் இது எனது புரிதல். நீங்கள் பூடகமாக ஏதாவது பொருள் வைத்திருப்பீர்கள் சொன்னால் தெரிந்துகொள்ள சித்தமாயிருக்கிறேன் . 14-Mar-2021 11:06 am
ஸ்பரிசன் - படைப்பு (public) அளித்துள்ளார்
09-Mar-2021 9:55 am

ஸ்பரி...

இன்று காலையில் மார்க்கெட் பக்கம் சென்று இருந்தேன். மிதமான வெயிலும் சீரான கடற்காற்றும் கிடைத்த இடம் அது.

சில சில காய்கறிகள் வர்த்தகம் என்ற ஒரு உருவில் வாழ்க்கையாகி கொண்டிருக்க நான் ஓரமாய் பார்த்தபடி கடந்தேன்.

ஒரு சாலையோர ஹோட்டல். வாசலில் சிலர் சாப்பிட்டு கொண்டிருக்க ஒரு மனிதன் அவர்களை விருந்தோம்பியபடி
இருப்பதை பார்த்தேன்.

தொழில்முறை சிநேகம் என்பது இல்லை. மாறாக, அன்பினால் மட்டுமே உந்தமுற்று அது ஒன்றே சேவை போல் சாப்பிடுவோரை சூழ்ந்து சுற்றி சுற்றி வந்து அவன் உபசரித்து கொண்டிருந்தான்.

நான் அங்கேயே சற்று நின்றேன். அவன் பேசும் மொழி எனக்கு புரியவில்லை. அப்போது அது எனக்கு தேவைய

மேலும்

ஸ்பரிசன் அளித்த படைப்பில் (public) sankaran ayya மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
01-Mar-2021 1:28 pm

உன் கவிதையை நீயே
மெச்சிக்கொள்வது போல
நானும் நினைவிழந்து
மெச்சிக்கொள்ள நினைக்கிறாய்.

அது என்னளவில்
கவிதையே அல்ல.
கவிதை போன்ற ஒன்றும் அல்ல.

எழுதிவிட்டு
பின்னர் நீ
எங்கெல்லாம் சென்றாய்
யாரை பார்த்தாய்
என்ன வாங்கினாய்
எதை தெருவில் தொலைத்தாய்
உன் மீது இடித்து சென்ற அவன்
கிணற்றுக்குள் நீ
டம்பளரை நழுவவிட்டது
சாமந்திப்பூவை தொட்டி நீரில்
விட்டெறிந்து விளையாடியது.

நீ சொல்லச்சொல்ல
நான்
கேட்டுக்கொண்டே இருக்கிறேன்.

அத்தனையும் கவிதைகள்...


__________________________________

.

மேலும்

உங்கள் பதிலுக்கு மிக்க மகிழ்ச்சி. மீண்டும் மீண்டும் படித்தேன். நடுத்தர வயது வந்த போதும் உள்ளூர தொன்மத்தின் மீது எனக்கு ஒரு அலுப்பு மட்டுமே மிஞ்சுகிறது. மாற்று இல்லாத ஒரே டெஸ்க்டாப் வால் பேப்பர் போல் ஒரு வறட்சியை மனம் உணர்கிறது. சங்கத்தமிழ், குறுந்தொகை, வெண்பா எல்லாம் பீடு மிக்கது. ஏற்று கொள்கிறேன். ஆனால் அந்நியமான உணர்கிறேன். பெர்னாட்ஷா கிளாசிக், ஜேம்ஸ் ஜாய்ஸ் கிளாசிக் என்று போகும்போது காம்யூ, காஃப்கா வேறு ஒரு அதிர்வை கொடுத்து விடுகிறார்கள். சங்கரர் படிக்கலாம். ஆனால் நீட்ஷே போல் உலுக்குவது இல்லை. ஆன்மீகம், மெய் ஞானம், மீமியல் என்று வரும்போது இந்தியத்தன்மையில் ஒரு உருக்குதல் பாவம் bhavam வரும்போது ஜென் தாவோ வேறு மாதிரி இருக்கிறது. மனதின் நயமான கிளர்ச்சி இது என்று வைத்து கொண்டாலும் எங்கேயோ நின்று தனியாக அவஸ்தை படும் உணர்வே இந்திய கிளாசிக் அம்சத்தில் இருக்கிறது என்ற ஒரு எண்ணம் எனக்கு. இதை என்னளவில் வைத்து பார்க்காமல் என் குடும்ப பொருளாதார சமூக அரசியல் பின்னனியில் கூட வைத்து பார்க்க வேண்டும். பு பி வெகுவாய் சில கவிதைகள் எழுதி உள்ளார். நீங்கள் மௌனி படிக்க வேண்டும். அவரின் அக உலகம் பற்றி எஸ். ராமகிருஷ்ணன் பேசிய பெரும் உரை youtube இல் பார்க்க கிடைக்கும். 02-Mar-2021 11:26 pm
ஆம் படித்திருக்கிறேன் டேனிஷ் வண்ணான் ஜோக் என்று black humour ம் சில வெளியிட்ட்டார் சாவி சிறந்த பத்திரிகையாளர் . நிறைய புதியவர்களுக்கு வாய்ப்புக் கொடுத்து ஊக்குவித்தார். புதுமைப்பித்தன் கவிஞர் இல்லை கதாசிரியர் . அந்த புனைப்பெயரில் வித்தியாசமான கதைகள் எழுதினார். தொன்மையான கவிஞர்களின் சிலை சித்திரங்கள் சிற்பி ஓவியர் செய்த கற்பனை உருவங்கள் . வித்திட்ட பாரதியாரின் வசன கவிதையை உல்டா பண்ணி புதுக் கவிதை என்று பெயர் கொடுத்தார்கள் உரைநடை எழுதிக் கொண்டிருந்தவர்கள் . ஒருகாலத்தில் குட்டிப் பத்திரிகைகளில் அஞ்ஞாத வாசம் செய்து கொண்டிருந்த புதுக்கவிதை கணினித் தளங்களின் பெருக்கத்தால் காளான் காடாகவும் ஹைப்ரீட் பூசணிக்காய் சாம்பக்காய் ஆக விரிந்து பறந்து கிடக்கிறது, நீங்கள் எழுதினாலும் நான் எழுதினாலும் யார் எழுதினாலும் புதுக் கவிதைகள் காலப்புயலில் காணாமலே போகும் . ஓவியத்தில் மரத்தூள் ஒட்டி கோலாஜ் ஆக்கும் போது அதுவும் ரசிக்கப்படுகிறது ---உண்மை அது visual . கோர்வையற்ற சொல்லழகற்ற உரைவரிகள் ஒரு சித்திரத்தை மனதில் ஏற்படுத்துமா ? கம்பனின் சொல்லாடலை சொற்சித்திரம் என்பார்கள். தொல்காப்பியம் மீளும்.----உண்மை . கடற்கோளில் குமரிக்கண்டம் அழிந்த போது மீண்டு வந்த ஒரே தமிழ் இலக்கியம் தொல்காப்பியம் என்பார்கள் ஆய்வாளர்கள் . இது illusion சரிஅது கவிதை அழகில் வெளிப்படவேண்டும் . சங்கரரும் இந்த illusion ஐப் பற்றி சொல்லியிருக்கிறார் மாயாமிதம் அகிலம் ஹித்வா என்பார் பஜகோவிந்தம் படித்துப்பாருங்கள் இங்கே தமிழில் தந்திருக்கிறேன் கானல் நீரை illusion மாயத் தோற்றம் என்பார்கள் மேற்கத்தயப் புத்தகங்களில் தாக்கம் தவறில்லை அதற்கு தமிழில் எந்த அளவிற்கு நியாயம் செய்திருக்கிறீர்கள் என்பதில்தான் உங்கள் வெற்றி இருக்கிறது புதுக் கவிதை POOR POETIC TOOL . 01-Mar-2021 8:08 pm
கவின் சார்க்கு கொடுத்த விளக்கம் தங்களுக்கும் ஒரு விளக்கமாக அமையும் என நம்புகிறேன். நன்றி. 01-Mar-2021 5:56 pm
வண்ணான் குறிப்புகள் எல்லாம்... இந்த பதம் புகழ் வாய்ந்தது. ஒருமுறை சாவியிடம் யாரோ சுஜாதா கொடுத்தால் அவர் வீட்டு வண்ணார் குறிப்புகள் வாங்கி அடுத்த வாரம் சாவி இதழில் வெளியிடுவீர்களா என்று கிண்டலாக கேட்க... அவர் வெளியிட்டார். இது வரலாறு. தொல்காப்பியருக்கு சிலை இல்லை ஆனால் வள்ளுவர் கம்பருக்கு இருக்கிறது. உங்கள் வருத்தம் கோபம் புரிகிறது. ஆனால் புதுமை கூடாது என்றால் புதுமைப்பித்தன் கிடைத்து இருப்பாரா? இது illusion. கவிதை இல்லை. ஓவியத்தில் மரத்தூள் ஒட்டி கோலாஜ் ஆக்கும் போது அதுவும் ரசிக்கப்படுகிறது. கவலை வேண்டாம்.... என் பிரதிகளை வரலாறு விழுங்கி விடும். தொல்காப்பியம் மீளும்.😊 01-Mar-2021 5:54 pm
ஸ்பரிசன் - ஸ்பரிசன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
25-Feb-2021 6:45 pm

கண்களில் பொறுக்க முடியாத வீக்கம். இவன் பிதற்றுவதை பார்க்கும்போது விஷத்தின் தன்மை மிக அதிகமாக இருக்கலாம்.

சாம்பல் நரிகள் வடதிசை நோக்கி செல்லும் கரிய இருளில் வேதாங்கி மூலிகையை கண்டறிவதும் கடினம் என்றுதான் எனக்கு தோன்றியது.

இவன் ஏன் இத்தனை மங்கலாக இருக்கிறான்? இவனுடைய நெற்றி பொட்டில் நரம்புகள் மஞ்சள் நிறத்தில் புரள்வது அத்துணை நல்ல விஷயமும் அல்ல...

நான் இன்னும் யோசித்தேன்.

மீசாகமாய் மரத்தின் பால் ஓரளவுக்கு சுவாசத்தை மீட்டு கொடுக்கும் என்று புரிந்தது. ஒரு கல்லால் அந்த மரத்தின் பட்டைகளை செதுக்கி சிறிதளவு பாலை கசிய வைத்தேன்.

அவன் லேசாய் முனகினான். அவனுக்குள் ஒரு இனம் புரியாத குரல் திண

மேலும்

உண்மைதான்... வடிவம் ஒழுங்கு மற்றும் இன்னபிற அம்சங்கள் எதுவும் இதில் இருக்க கூடாது.மேலும் சர்வ சுதந்திரமும் வாசிப்போருக்கு கொடுத்து விட வேண்டும். லட்சியமா...மூச்... இப்படி ஒரு திகட்டல் இல்லாத ஆனால் ஏதோ சவாலான அம்சம் இந்த பின் நவீனத்துவம் பாணியில் இருக்கிறது என்று உள்ளுணர்வு சொல்லி தொலைக்க இலியிச்சின் 2வது அவதாரம் இது. போமோ (post modernism) காலாவதி ஆகி விட்டது என்று 95 முதல் 2006 க்கும் அப்பால் வரையிலும் எழுதி வசைபாடி இலக்கிய மகோன்னதர்கள் அடுத்த தளம் செல்வதாக போயே போய் விட்டார்கள். எஸ். ரா, ஜெமோ,இப்படி.... நமக்கென்ன வந்தது... ஒருவேளை எவளாச்சும் ஜெர்மன்காரி (அழகான ஜெர்மன்காரி) இதை படித்துவிட்டு என் மேதாவிலசத்தை மெச்சி(?!) வந்து தொலைக்கலாம். மொழி பெயர்க்கலாம். நோபல் பிரைஸ் கிடைக்கலாம் என்றெல்லாம் சொல்லி என் மனதை தாஜா செய்து எழுதி கொண்டிருக்கிறேன். போகும்வரை போகட்டும். நீங்கள் இருக்கிறீர்களே... விமரிசனம் செய்ய.. ரொம்ப போனால் நீங்களும் ஒரு பாத்திரத்தில் இடம் பெற்று விடுவீர்கள்... பின்ன என்ன... பின் நவீனத்துவமா... கொக்கா... உபரிதகவல் ஒன்று... ஒரு 8000 ரூபாய்க்கு இப்படியே சில புத்தகங்களை வேறு வாங்கி வைத்துள்ளேன் படிக்க ஹாருகி முரகாமி முதல் எஸ்.வி ராஜதுரை வரை... பெருமாள் கோவிலை (இலியிச்) இடிக்கிறேனோ இல்லையோ ராமாயணங்களை படிக்க இப்படி எழுதுவதுதான் ஒரே குறுக்கு வழி. மிக்க நன்றி... 26-Feb-2021 1:24 am
இப்படி தினத்தந்தி சிந்துபாத் கதை மாதிரி குட்டிகுட்டியாய் எழுதிக் கொண்டு போனால் கதை ஒரு மாமாங்கத்துக்கு நீளும் . ஆரம்ப தொடர்பு இப்பொழுது வந்த பகுதிகளை படித்து விட்டு கருத்து சொல்கிறேன் . 25-Feb-2021 7:39 pm
ஸ்பரிசன் - ஸ்பரிசன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
11-Feb-2021 4:16 pm

எனக்கிருக்கும்
வெட்கம் மானரோஷம் பற்றி
எனக்கே சந்தேகம்தான்.

விலைபோகா இப்பிணத்தை
விலைபெறா ஒன்றாக்கி
விலைபேசிக்கொண்டிருக்கும்
அற்பத்தனத்தில் நானில்லை
என்பதால் மட்டுமே...

நான்

விலகி இருக்க முடிகிறது
என்னிடமிருந்தும்
என்னை தன்போல் கொண்டாடும்
அவனிடமிருந்தும்....

இருப்பினும்,
உயிரோடு இருக்கும்வரை
என் பிணத்தை
நானே சுமக்கிறேன்
என்றளவில் கொஞ்சம்
அமைதியாக இருக்கிறது.

மேலும்

zen கவிதைகள் சில ஆங்கிலத்தில் படித்திருக்கிறேன். சுருக்கமாக அழகாக இருக்கும் . பொருளுடன் மினிமனி பூச்சி போல் மிளிரும் இது அந்த ZEN ஆ ? 13-Feb-2021 6:57 pm
போஸ்ட் மாடர்னிசம்... கொஞ்சம் அந்தப்பக்கம் போய் படித்துவிட்டு செய்த சேட்டை இது... 13-Feb-2021 5:06 pm
self pity தன்னிரக்கம் மனத் தளர்ச்சியைத் தரும் . நடைபிணமா ஒரு வாழ்க்கை என்று வயோதிகர்கள் அலுத்துக் கொள்வதை வேறுவிதமாக சொல்லியிருக்கிறீர்களோ ? 11-Feb-2021 10:16 pm
ஸ்பரிசன் - ஸ்பரிசன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
11-Feb-2021 4:16 pm

எனக்கிருக்கும்
வெட்கம் மானரோஷம் பற்றி
எனக்கே சந்தேகம்தான்.

விலைபோகா இப்பிணத்தை
விலைபெறா ஒன்றாக்கி
விலைபேசிக்கொண்டிருக்கும்
அற்பத்தனத்தில் நானில்லை
என்பதால் மட்டுமே...

நான்

விலகி இருக்க முடிகிறது
என்னிடமிருந்தும்
என்னை தன்போல் கொண்டாடும்
அவனிடமிருந்தும்....

இருப்பினும்,
உயிரோடு இருக்கும்வரை
என் பிணத்தை
நானே சுமக்கிறேன்
என்றளவில் கொஞ்சம்
அமைதியாக இருக்கிறது.

மேலும்

zen கவிதைகள் சில ஆங்கிலத்தில் படித்திருக்கிறேன். சுருக்கமாக அழகாக இருக்கும் . பொருளுடன் மினிமனி பூச்சி போல் மிளிரும் இது அந்த ZEN ஆ ? 13-Feb-2021 6:57 pm
போஸ்ட் மாடர்னிசம்... கொஞ்சம் அந்தப்பக்கம் போய் படித்துவிட்டு செய்த சேட்டை இது... 13-Feb-2021 5:06 pm
self pity தன்னிரக்கம் மனத் தளர்ச்சியைத் தரும் . நடைபிணமா ஒரு வாழ்க்கை என்று வயோதிகர்கள் அலுத்துக் கொள்வதை வேறுவிதமாக சொல்லியிருக்கிறீர்களோ ? 11-Feb-2021 10:16 pm
ஸ்பரிசன் - ஸ்பரிசன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
09-Feb-2021 2:47 pm

சுவரிலிருந்து குதித்து
வீட்டுக்குள் விரைந்தோடி
மறைவிடம் தேடித்தேடி
அலுப்புற்று தவித்து

மேசை நாற்காலியில்
கால் வழுக்கி புரண்டு
இங்க் பாட்டிலில் மோதி
புது நிறமுற்று வியந்து

தரையில் தாழ்ந்து
கால் பரத்தி நிமிர்ந்து
தன் நெஞ்செல்லாம் நக்கி
என்னை அசுரனாய்
கூர்ந்து நோக்கியபின்
வாசலில் மறைந்தோடும்
அந்தப்பூனை...

வழி தெரியாது
வாசல் தெரியாது
சுற்றி சுற்றி அலைகிறது
மனதில்...
நானறியா அறையொன்றில்.

பூனையின் மனதில் நானும்
என் மனதில் பூனையுமாய்
ஓடிக்கொண்டே இருக்கிறோம்
பூட்டிய அறைகளுக்குள்.

மேலும்

தாவரங்கள் உயிர் கொண்டவை என்பது போல்தான். மனம் இருக்கலாம். சைகலோஜிஸ்ட் என்று யாரும் இல்லை வேண்டாம் என ஜெ கே சொல்வதுதான் நினைவில் வருகிறது. Magical realiசத்தில் லாஜிக் எதற்கு? என்று நழுவ விருப்பம் இல்லை. இந்த கவிதை எழுதி முடித்த அடுத்த கணம் பூனை பிஸ்கெட் கேட்டு வீட்டுக்குள் வந்து விட்டது. அதை 2 நாள் தேடியும் வரவில்லை. அந்த ஏக்கத்தில் எழுதியதுதான் இது. இதை எப்படி புரிந்து கொள்வது..? கவிதையால் வியந்து என்னை நான் கடக்கிறேன்... 11-Feb-2021 4:14 pm
மிக்க மகிழ்ச்சி... வாசித்தமைக்கு 11-Feb-2021 4:10 pm
பூனையைப் பார்த்து ...... இது என்ன ஒரு மினி வேங்கைபோல் அல்லவா உள்ளது என்று தோன்றவில்லையா எப்போதாவது எனக்கு தோன்றியது உண்டு..... வீட்டு மதிலில் அங்கு ஓர் அணிலைப் பிடிக்க இது வேம்பும் நிலையில்! பூனை உங்கள் மனதில்..... நீங்கள் பூனை மனதில்..... உஹ்.... பூனைக்கு ஆறறிவு எட்டுதோ? 09-Feb-2021 6:41 pm
cat running psychology ! மனித மனதை மங்கி குரங்கிற்கு ஒப்பிட்டு தாவும் தன்மையை சொல்லுவார்கள் சோ மனம் ஒரு குரங்கு என்று ஒரு படம் எடுத்தார் . பெர்னாட் ஷாவின் PYGMALION நாடகத்தை தமிழுக்கு ஏற்றவாறு சிறப்பாக தந்திருந்தார் . பூனைபோல் மனம் அங்கும் இங்கும் ஓடுகிறது என்றால் உவமை சரி பூனையின் மனதில் நானும் என் மனதில் பூனையுமாய் ----முதல் வரி சாத்தியமா ஐயறிவு பிராணிக்கு ? 09-Feb-2021 6:06 pm
ஸ்பரிசன் - ஸ்பரிசன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
09-Feb-2021 1:52 pm

தனிமையின் துளை வழியே
இரவின் பயணம்.
இரவின் துளை வழியே
பகலின் பயணம்.
பகலின் துளை வழியே
ஒளியின் பயணம்.
ஒளியின் துளை வழியே
ஒலியின் பயணம்.

ஒலியின் துளை வழியே
இசையின் பயணம்.
இசையின் துளை வழியே
கனவின் பயணம்.
கனவின் துளை வழியே
கண்ணீரின் பயணம்.

கண்ணீரின் துளை வழியே
காட்சிகளின் பயணம்.
காட்சியின் துளை வழியே
வாழ்க்கையின் பயணம்.

வாழ்வின் துளை வழியே
மரணத்தின் பயணம்.
மரணத்தின் துளை வழியே
தனிமையின் பயணம்.
தனிமையின் துளை வழியே
இரவின் பயணம்.

மேலும்

அந்த படம் பார்த்திருக்கிறேன். மனதில் எவ்வளவு கொதிப்பு இருந்தாலும் உங்களுக்கு பதில் எழுதும்போது லேசாகி விடுகிறது. மிக்க நன்றி 11-Feb-2021 4:09 pm
Poetry with many holes . துளைகள் அருமை எனக்குப் பிடித்தது மாதுளை . மாதுளை என அவளைச் சிந்தித்தால் மாதுளை முத்துக்களை அவள் சிந்துவாள் புன்னகையில் அனார்கலி கேள்விப்பட்டிருப்பீர்கள் . அனார் என்றால் மாதுளை இந்த மாதுளை முத்துச் சிரிப்புக்காரி யின் மேல் உயிர்க் காதல் கொண்டான் இளவரசன் சலீம் . தந்தை அக்பர் அதை விரும்பவில்லை தடுத்தார் . காரணம் அனார்கலி ஒரு நாட்டியக்காரி . முஹல் ஏ ஆஸம் என்ற இந்திப்படம் அக்பர் என்று தமிழில் இருக்கிறது சிறப்பான படம் ரசிப்பீர்கள் 09-Feb-2021 6:27 pm
ஸ்பரிசன் - ஸ்பரிசன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
09-Feb-2021 10:55 am

பார்வதியின் வீட்டில்தான் நளினியும் இருந்தாள். அவள் கைகளில் ஒரு நீல நிற பைல். அதில் நிறைய பழுப்பு நிற காகிதங்கள் இருந்தன.

இவைதான் ஒருவேளை இலியிச் எழுதிய நாவலாக இருக்குமா என்ற எண்ணம் எனக்கு.

பேராசிரியர் என்னிடம் பேசலானார்.

இலியிச் ஆரவல்லி மலைத்தொடர் சார்ந்த ஒரு கிராமத்தில் இருக்கும் போது அந்த நாவலுக்கான முயற்சி நிகழ்ந்து உள்ளது. அவன் அதை முழுமையாக எழுதினானா அல்லது வெறும் குறிப்புகளாக மட்டும் அவன் எழுதி வைத்திருக்கிறானா என்பது இப்போது முற்றாக தெரியாது என்றும் நீங்கள் அங்கு பயணப்பட்டால் குஜராத் எல்லையில் இருந்து அக்கிராமத்துக்கு செல்லலாம் என்றும் கூறினார்.

எனில், இந்த கடினமான பணி மற

மேலும்

என்னுடைய பெயர் இல்யீச்... 22-Mar-2021 3:37 am
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (253)

Deepan

Deepan

சென்னை
user photo

வீரா

சேலம்
Hemadevi Mani

Hemadevi Mani

malaysia
user photo

சக்திவேல் சிவன்

சிங்கப்பூர்

இவர் பின்தொடர்பவர்கள் (544)

இவரை பின்தொடர்பவர்கள் (254)

BABUSHOBHA

BABUSHOBHA

அவிநாசி,திருப்பூர்
மேலே