சொல்

சொற்களை எப்படி
தேந்தெடுக்க?

அதில் வண்ணமோ அல்லது
வாசனையோ நிரப்புவதற்கு
எந்த துளையில் இருந்து
பயணிக்க வேண்டும்?

ஒடிந்த சொற்களை
எந்த நிலத்தில் புதைப்பது?

காலத்தில் புதையுண்டு போன
சொற்களில் வழியும் அர்த்தத்தை
எந்த சீசாவில் நிரப்புவது?

எண்ணங்கள் எனும் பெயரில்
சதா கடிக்கும் இந்த
வார்த்தைகளின் கொடுக்குகளை
கற்பனையால் பிய்ப்பது எங்ஙனம்?

குளிர் வெயிலுக்குள் நகரும்
சொற்களின் உருவங்களை
யாரைக்கொண்டு எப்படி வரைவது?

குப்பைத்தொட்டிக்குள்
தனித்து வாழும்
சொற்களை உழுது வரும்
கிருமிகளின் பாஷைக்குள்
எந்த சொல் பாடலாக மலரும்?

ஒரு சொல் மொழிக்கு
தரும் வாடகை எவ்வளவு?

சொல் தீண்டிய சொல்
எதுவாக இருக்கும்?

......

எழுதியவர் : ஸ்பரிசன் (14-Mar-24, 5:46 pm)
சேர்த்தது : ஸ்பரிசன்
Tanglish : soll
பார்வை : 27

மேலே