MOUSE TRAP
எலி ஒன்று
பொறியில் அகப்பட்டுக் கொண்டது
தின்ற வடை சீரணித்திருக்கும்
புழுக்கைகள் அத்தாட்சி
ஆயினும் குறுக்கும் நெடுக்கும்
ஓடி ஓசை எழுப்பிக் கொண்டிருந்தது
எலியை வெளியே விட்டுவிட்டு வா
தாயின் ஆணை
நாவலை குப்புற போட்டுவிட்டு
வேண்டா வெறுப்பில் எழுந்தேன்
பொறியை எடுத்து வாசலில் வைத்து
திறந்து விட்டேன்
அந்த நீண்டவால் சுண்டெலி
வெளியே ஓடாமல் மீண்டும்
உள்ளே நுழைந்து
தாயின் காலடி வழியே ஓடி
வீட்டில் எங்கோ மறைந்தது
சாரிம்மா நான் அசடு வழிந்தேன்
உனக்குத் தெரியுமா
அகதா கிறிஸ்டியின் நாடகம்
MOUSE TRAP லண்டனில்
1952 லிருந்து 2020 வரை தொடந்து நடந்ததாம்
பிடித்த எலியை வெளியே விடத் தெரியவில்லை
MOUSE ஆம் TRAP ஆம் ..ரொம்ப புத்திசாலி
தலையில் அடித்துக்கொண்டாள் தாய்
பாஷாணம் வைத்து எலியைக் கொல்வது
பாவம் ...தாயின் நம்பிக்கை !
இன்று இன்னொரு வடை
இன்னொரு முறை MOUSE TRAP
வீட்டில் அரங்கேறும்
புத்திசாலி எலி விழுமா ?
MOUSE QUIS
1 . வெளியே விட்ட எலி சுதந்திரம் கிடைத்தது என்று
வெளியே ஓடாமல் ஏன் வீட்டுக்குளே மீண்டும் நுழைந்தது ?
2 .சின்ன எலிக்கு ஏன் நீண்ட வால் கொடுத்தான் இறைவன் ?
3 எலி சின்னப் பிராணி யானை பெரிய மிருகம்
ஆயினும் ஆங்கிலேயன் யானைக்கு எலிபென்ட் என்று பெயர் ஏன்
கொடுத்தான் ?
கதை இன்ஸ்பிரஷன் ஸ்பரிசனின் எலி