மதிஒளி சரவணன் - சுயவிவரம்

(Profile)எழுத்தாளர்
இயற்பெயர்:  மதிஒளி சரவணன்
இடம்
பிறந்த தேதி
பாலினம்
சேர்ந்த நாள்:  04-Nov-2021
பார்த்தவர்கள்:  217
புள்ளி:  28

என்னைப் பற்றி...

பெரிதாக ஒன்றுமில்லை

என் படைப்புகள்
மதிஒளி சரவணன் செய்திகள்
மதிஒளி சரவணன் - படைப்பு (public) அளித்துள்ளார்
26-Aug-2023 9:12 pm

பறவையின் வாசனை - கமலா தாஸ்

"முதலில் என்னைச் சூழ்ந்துள்ள உடைகளையும் ஆபரணங்களையும் அகற்றி வைக்கிறேன். பின்பு, இந்த மெல்லிய அரக்கு நிறத் தோலையும் அதனுள் இருக்கும் எலும்புகளையும் உதறுகிறேன். இறுதியில் வீடற்ற, அனாதையான, அதியழகு நிறைந்த தோல், எலும்புகள் என அனைத்துக்கும் அடியில் உள்ள என் ஆன்மாவை உங்களால் காண இயலும் என நம்புகிறேன்"

மேற்காணும் வரிகளை வனைந்தவர்
மாதவிக்குட்டி என்ற பெயரில் மலையாளத்திலும், கமலா தாஸ் என்ற பெயரில் ஆங்கிலத்திலும் ஒரே நேரத்தில் சிறுகதைகள் மற்றும் கவிதைகள் எழுதி முக்கிய எழுத்தாளராக திகழ்ந்த கமலா சுரையா என்று பின்னாளில் அறியப்பட்ட எழுத்தாளர் கமலா தாஸ்.

அம்மா அப்பா இ

மேலும்

மதிஒளி சரவணன் - படைப்பு (public) அளித்துள்ளார்
26-Aug-2023 9:04 pm

விட்டு விடுங்கள்!

மொத்தமாக உடைத்துவிட்டு
சாவுசெய்தி கொணர்பவனைப்
நலம் விசாரிப்பது போல
எத்தனை நைச்சியமாக ஆரம்பிக்கிறார்கள் எப்படி இருக்கிறாய் என்று...

அடக்கி வைத்த வைராக்கியத்தோடு
நலத்துக்கென்ன கேடு வந்துவிட போகிறதென வழக்கமான எள்ளலாய் இப்போதெல்லாம்
கூறிட இயலுவதில்லை

எனக்காக நான் வாழ எத்தனித்த அந்த ஒரு நாளிலிருந்து சொல்லெறிந்து கொண்டேதான் இருக்கிறார்கள்
ஒரு நாள் என் தோற்றத்தில்
ஒரு நாள் என் பழக்க வழக்கங்களில்
ஒரு நாள் என் நடத்தையில்
ஒரு நாள் என் ஆசைகளில்
ஒரு நாள் என் கனவுகளில்
இப்படி எத்தனையோ ஒரு நாள்களில்
மௌனியாகவே கழிந்து போனது
நரை அறிமுகம் ஏற்பட்ட
இன்று வரை..

மேலும்

மதிஒளி சரவணன் - படைப்பு (public) அளித்துள்ளார்
10-Oct-2022 4:27 pm

பறந்து திரிந்த இடங்களை
மெல்ல நடந்து
கடந்து கொண்டிருக்கிறேன்

சிதறிக்கிடக்கும் நினைவுப் பூக்களில் சிலதை சேகரித்து
கடந்து கொண்டிருக்கிறேன்

மறந்து விடாதாயென
ஏங்கி தவித்த அவமானங்களின் தடங்களை சற்றே தடவிவிட்டு
கடந்து கொண்டிருக்கிறேன்

மலடாகிப் போன உணர்வுகளை மணக்கச் செய்யும் விதம் அறிந்து
கடந்து கொண்டிருக்கிறேன்

மென்றுத் துப்பிய வார்த்தைகளின் கறைகளை அழிக்க முடியாது
கடந்து கொண்டிருக்கிறேன்

இதுவும் கடந்து போகும்
ஆனால் எதுவும் மறந்து போகாதே

மறக்க பிரயத்தனங்கள்
ஏதும் செய்யாமல்
அனைத்தும் எனக்கே
எனக்கென்ற அடையாள அட்டையோடு
கடந்து கொண்டிருக்கிறேன்..
ஆனால் நீங்கள்...?!!!
-

மேலும்

மதிஒளி சரவணன் - படைப்பு (public) அளித்துள்ளார்
04-Jan-2022 2:57 pm

என் ப்ரியசகா
இது கடிதமல்ல..
எந்தன் கந்தல் இதயம்...

இப்படி எழுதுவது  பிடிக்காதென
தெரிந்தே தான் எழுதுகிறேன்...
என்னை உணர்ந்தும்‌ தெரிந்தே
தவிர்க்கும் உனக்கு...

வானம் கொள்ளா பறவையின்
சிறகை கூண்டில்
அடைக்கும் அத்தனை குரூரம்
இந்த எழுத்துகளில்...
உன்னிடம் கூறவேண்டியதை
அடைத்துவிட பதைபதைக்கும்
அத்துனை அவசரம் எனக்கு

அப்படியென்ன அவசியம் வந்ததென முறைத்துக் கொள்வாய்...
கொஞ்சம் முனகவும் செய்வாய்...

கேட்டுக்கொள் ...
ப்ரியசகா முன்பிருந்ததற்கு இப்போது
எதுவும் கெட்டுவிடவில்லை

கேலிசெய்து செய்து ஓடிய குறுஞ்செய்திகள்
நோய்கண்டு மொத்தமாய்
முடங்கிப் போயிருக்கின்றன
அவ்வளவு தான்

மேலும்

மதிஒளி சரவணன் - கவின் சாரலன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
26-Nov-2021 10:33 pm

நீலவான்தனில் பிறையாய்நிலா
நீலவிழியில் முழுநிலவாய்
மாலைப்பொழு தின்தென்றலாய்
கூந்தல்காற் றிலாடநீயும்
புன்னகைஇத ழுடன்வந்தாய்
இளவேனில்
அந்திப் பொழுது மஞ்சள் தூவிட
நெஞ்சில்கா தலேந்தி நீயென் அருகே !

மேலும்

மிக்க நன்றி கவிப்பிரிய மதியொளி சரவணன் 27-Nov-2021 10:14 am
நல்லா இருக்கு 26-Nov-2021 11:27 pm
மதிஒளி சரவணன் - மதிஒளி சரவணன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
25-Nov-2021 6:05 pm

வரமாட்டேன் என்று தெரிந்தும்
ஏன் வெறித்து பார்த்துக் கொண்டிருக்கிறாய்!

பேசமாட்டேன் என்று தெரிந்தும்
ஏன் ஆவலாய் கேட்டுக் கொண்டிருக்கிறாய்!

இசைக்கமாட்டேன் என்று தெரிந்தும் ஏன் மயங்கி போக மனதை செலுத்துகிறாய்?!

இப்படி எத்தனையோ கேள்விகளை
சுமந்து இருக்கிறது

உனது அத்திபூத்தாற் போன்ற வருகையும்
நமதந்த சந்திப்பும்
இந்த குளக்கரையில்..!

வார்த்தைகளும் வழக்கங்களும் தானா இங்கே அனைத்தையும் தீர்மானிக்கிறது...

அத்தனைக்கும் ஒற்றைப் பதிலாய்
இருக்கிறது 

என்னை பார்க்கும் நொடிகளில்
இதயம் தெறித்து விழுந்திடுமோவென
இமைக்க மாட்டாமல் போராட்டம் செய்யும் உனதந்த விழிகள்...!!
- மதிஒளி சரவணன்

மேலும்

நன்றி 🙏 26-Nov-2021 3:00 pm
மிகவும் அருமையான வரிகள் 26-Nov-2021 2:59 pm
மதிஒளி சரவணன் - மதிஒளி சரவணன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
23-Nov-2021 3:02 pm

பார்க்கும் போதெல்லாம் எந்தன்
குட்டி இதயம் படபடத்ததில்லை
காணும் போதெல்லாம் காதல் வழிய கண்களால் பருகியதில்லை
காது மடல்களின் நுனியை
மீசைமுடிகள் உரசியதில்லை

தொலைவான தருணங்களில் நிமிடத்திற்கொருமுறை
அழைத்து விசாரித்ததில்லை
சில நொடி உரையாடல்கள் போதுமென்றாலும்
எப்போதும் மணித்தியாலங்களாய் நீண்டதில்லை

ஊரறிய மஞ்சள்கயிறுகட்டி
உரிமையை உறுதி செய்த பின்னும்,
நாடி பிடித்து பட்டு தங்கமென செல்லம் கொஞ்சியதில்லை
ஆசையாய் ஆடைகள் தேர்ந்தெடுத்து அளித்ததில்லை
அரக்கபரக்க கிளம்பிடும் காலைப்பொழுதுகளில்
காலி வயிற்றை நிரப்ப
ஊட்டி விட்டதில்லை

வெளியூர் பயணங்களில் ஏக்கங்கொண்டு
புகைப்படத்தில் புதை

மேலும்

மகிழ்ச்சி. நன்றி 🙏 24-Nov-2021 2:30 pm
இரசித்து எழுதியுள்ளீர்கள்....... உங்கள் வரிகளை ருசித்து படித்தேன் மிக இனிமையாக உள்ளது.......😍😍😍❣️❣️👌👌👌💐💐💐💐💐 24-Nov-2021 11:47 am
மதிஒளி சரவணன் - மதிஒளி சரவணன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
20-Nov-2021 12:07 am

என்னிடமும் இருக்கிறது
புதையலென பாதுகாக்கப் பட்டிருக்கும் உனக்கான பரிசுப்பொருள்
வாசிக்கப்படாத கவிதைகளாக!

உதிர்த்துப் போவதற்கும் களைந்து போவதற்கும் முயலாத உந்தன் நினைவுகளை சுமக்கும் இருக்கைகள் வாசிக்கப்படாத கவிதைகளாக!

உயர பறக்க ஆசைப்பட்டு
உலுத்துப் போன சிறகுகளை ஒத்த நிறைவேற்ற இயலா வாக்குறுதிகள் வாசிக்கப்படாத கவிதைகளாக!

மொழியாளுமையற்ற மௌனங்களை உடைத்திடும் அன்பால் தோய்ந்த கரடுமுரடான வார்த்தைகள் வாசிக்கப்படாத கவிதைகளாக!

நேரில் வர இயலாவிட்டாலும் மன மராமத்து செய்யும் உனக்கான பரிசு பொருள் என்றும் நிறைந்து வழிந்து கொண்டேதான் இருக்கும் எரிமலைகுழம்பினைப் போல வாசிக்கப்படாத கவிதைகளாக ஆனால்

மேலும்

மதிஒளி சரவணன் - மதிஒளி சரவணன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
20-Nov-2021 12:05 am

ஏதோவொன்றை எதிர்நோக்கியே
இந்த பகலும் இரவும்
சண்டையிடாது
நகர்ந்து கொண்டே இருக்கின்றன

நாம் மட்டும் ஏன் தொடர்ந்து
சண்டையிட்டு கொண்டே இருக்கிறோம்..

அதிதீவிரமான ஆலோசனைகள் எல்லாம்
புகைமூட்டமென கலைந்து போயின

காணாத ஓரிரு மாதங்களில்
கையில் ஒற்றை சாக்லேட்டை
கொண்டு வந்து நீட்டுகிறாய்
புன்னகையுடன்
இனிப்பான செய்தி யென...

அடிநெஞ்சம்வரை கசக்கிறது
எதிலோ தோற்றுவிட்டேன்
"ஏன் ஒரு மாதிரியாக இருக்கிறாய்"
என்று கேளாமலே சென்றுவிடேன்!!
- மதிஒளி சரவணன்

மேலும்

நன்றி 🙏 20-Nov-2021 6:42 pm
அருமை 20-Nov-2021 5:55 pm
மதிஒளி சரவணன் - மதிஒளி சரவணன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
04-Nov-2021 2:34 pm

உங்களது அனைத்து
குறுஞ்செய்திகளுக்கும்
எனது பதில்
ஒற்றை ரோஜா....

உங்களது அனைத்து
குற்றச்சாட்டுகளுக்கும்
எனது  மறுப்பு
ஒற்றை ரோஜா

உங்களது அனைத்து
கோபங்களுக்கும்
எனது சமாளிப்பு
ஒற்றை ரோஜா

உங்களது அனைத்து
சோகங்களுக்கும்
எனது ஆறுதல்
ஒற்றை ரோஜா

உங்கள் பார்வைக்கேற்ப
உங்கள் நேரத்திற்கேற்ப
நேசத்திற்கேற்ப
தேவைக்கேற்ப வழியும்
வண்ணங்களை
பூசிக்கொள்ளும்
எந்தன் ஒற்றை ரோஜா வின்
நிறம் என்றென்றும்
கறுப்பு வெள்ளை தான்!
- மதிஒளி சரவணன்

மேலும்

நன்றி 18-Nov-2021 7:45 pm
அருமை 04-Nov-2021 2:42 pm
மேலும்...
கருத்துகள்

மேலே