கடந்து விடவே நினைக்கிறேன் 1
ஏதோவொன்றை எதிர்நோக்கியே
இந்த பகலும் இரவும்
சண்டையிடாது
நகர்ந்து கொண்டே இருக்கின்றன
நாம் மட்டும் ஏன் தொடர்ந்து
சண்டையிட்டு கொண்டே இருக்கிறோம்..
அதிதீவிரமான ஆலோசனைகள் எல்லாம்
புகைமூட்டமென கலைந்து போயின
காணாத ஓரிரு மாதங்களில்
கையில் ஒற்றை சாக்லேட்டை
கொண்டு வந்து நீட்டுகிறாய்
புன்னகையுடன்
இனிப்பான செய்தி யென...
அடிநெஞ்சம்வரை கசக்கிறது
எதிலோ தோற்றுவிட்டேன்
"ஏன் ஒரு மாதிரியாக இருக்கிறாய்"
என்று கேளாமலே சென்றுவிடேன்!!
- மதிஒளி சரவணன்