குலோத்துங்க சோழன் கோவை - நூல் - பாங்கிமதியுடன்பாடு - அவரவர் மனக்கருத்துணர்தல்- பாடல் 101
அருணாசலக் கவிராயர் எழுதிய குலோத்துங்க சோழன் கோவை
நூல்.
அஃதாவது - மூன்றாநாள் தோழனாற்கூடுங் கூட்டம்; அது: சாரிதல் கேட்டல் சாற்றல் எதிர்மறை நேர்தல் கூடல் பாங்கிற் கூட்டலென ஏழுவகைப்படும்; அவ்வேழுந் தலைவன் பாங்கனைச் சார்தல் முதல் பாங்கிற் கூட்டலீறாகிய இருபத்துநான்கு விரிகளையுடையன; அவை வருமாறு:-
தலைவன் பாங்கனைச் சார்தல்.
பாங்கன் தலைவனை யுற்றது வினாவல்
தலைவ னுற்ற துரைத்தல்.
கற்றறி பாங்கன் கழறல்.
கிழவோன் கழற்றெதிர் மறுத்தல்.
பாங்கன் கிழவோற் பழித்தல்.
கிழவோன் வேட்கை தாங்கற்கருமை சாற்றல்.
(இ-ள்) தலைவன் பாங்கனைநோக்கி நீ பழிக்கின்ற என்னுள்ளந் தேறுதற்கு வேட்கை யென்னாற் றாங்கமுடியாதென்று கூறுதல்.
இதுவுமது.
பாங்கன் றன்மனத்தழுங்கல்.
ஒன்பதாவது - பாங்கிமதி யுடன்பாடு.
அஃதாவது--தலைவி வேறுபாட்டைப் புணர்ச்சியுண்மை யறிந்தாராய்ந்து தோழி தன்மதியை யுடன்படுத்தல்; அது: முன்னுறவுணர்தல், குறையுறவுணர்தல், இருவருமுளவழி யவன்வரவுணர்தலென மூன்றுவகைப்படும்;
அவற்றுள் - முன்னுறவுணர்தலாவது தலைவனைப் புணர்ந்து மீண்டுவந்து தன் முன்னுற்ற தலைவியின் வேறுபாட்டைப் பாங்கி கண்டு அதனானே கூட்ட முண்மையறிதல்;
அது: வகையின் வகையாய் ஐயமுற்றோர்தல், ஐயந்தீர்தல், பல்வேறு கவர்பொருட் சொல்லி நாடல் என மூன்றாம்;
அவற்றுள்- ஐயமுற்றோர்தல் பலவகைப்படும்;
குறையுறவுணர்தல்.
அஃதாவது-தலைவன் தழைமுதலியவற்றைக் கொண்டு தன்பாற் குறையுற்று நிற்பக்கண்டு பாங்கி அதனானே கூட்டமுண்டென்றறிதல்; அது: தேர்தல் தெளிதலென இருவகைப்படும். தேர்தல்-ஆராய்ச்சி செய்தல். அவைவருமாறு:-
பெட்டவாயில் பெற்றிரவு வலியுறுத்தல்.
ஊர்வினாதல்.
பேர்வினாதல்.
கெடுதிவினாவல்.
நெஞ்சு வினாதல்.
வழிவினாதல்
மொழியாமை வினாதல்.
இடைவினாதல்.
தேர்தல்.
எண்ணந் தெளிதல்.
இருவரும் உளவழியவன் வரவுணர்தல்
அஃதாவது-தலைவியுந் தானும் ஒருங்கிருந்த விடத்தில் தலைவன் றனிவரப் பாங்கிகண்டு அதனானே கலப்புண்மை யறிதல், அதன்விரி வருமாறு:-
கையுறை யேந்திவருதல்.
புனங்கண்டு மகிழ்தல்.
இருவரும் உளவழிச்சேறல்.
தலைவன் அவ்வகை வினாதல்.
எதிர்மொழி கொடுத்தல்.
இறைவனை நகுதல்.
(இ-ள்) தலைவனப்பாற் சென்றானாகப் பாங்கி தலைவியை நோக்கி அசதியாடல்.
அசதியாடல் - சிரித்துப் பேசுதல்.
இதுவுமது.
பாங்கி மதியி னவரவர் மனக்கருத்துணர்தல்.
(இ-ள்) பாங்கி தன்னறிவால் தலைவன் தலைவியென்ற இருவர் மனக்குறிப்பை யாராய்தல்.
இதுவுமது.
கட்டளைக் கலித்துறை
வள்ளலுந் தாருவு நேராங் குலோத்துங்கன் வாழ்கொ(ல்)லிசூ
ழள்ளலம் பூருஞ் சுனைச்சா ரலுக்கே யடுத்திருவ
ருள்ள மெலாமித் தனைநாட்சொல் லாதிங் கொளித்திருந்த
கள்ள மெலாமின் றறிந்தே மிவர்தங் கடைக்கணிலே! 101
இவ்வேழு மிருவருமுளவழியவன் வரவுணர்தலின் விரியென்க.
9-பாங்கி மதியுடன்பாடு முற்றிற்று!