பஞ்ச பூதங்கள்
பஞ்ச பூதங்கள்
நெருப்பு
அக்னி என்ற பெயர் கொண்ட என்னை குவலயம் நெருப்பாக காணும்
ஆகாயத்திற்கும் பூமிக்கும் தொடர்பு கொண்டவன் என்பதால்
இறைவனுக்கோ தேவர்களுக்கோ வேண்டினால் கொடுக்க என்னை அழைப்பர்
ஈசன் கொடுத்த சக்தியால் நான் அதை அவர்களுக்கு கொண்டு சேர்ப்பேன்
உன்னதமான இந்த தன்மையால் என்னை சாட்சியாக கொண்டு மானிடர் எதையும் செய்வார்கள்
ஊர் வளமடைய செய்யும் வேள்வி திருக்கோயில் குடமுழுக்கு முதல் மானிடரின் திருமண வைபவம் மற்றும் பூஜைகளில் எனக்கு முக்கியத்துவம் உண்டு.
என்னை அடக்க முடியாமல் போனால் நான் பெரும் அழிவை கொடுப்பேன்
ஏழையோ பணக்காரனோ தெரிந்தோ தெரியாமலோ என்னை தொட்டால் அவர்களை சுட்டு பொசுக்கி விடுவேன்
கற்பூர ஜோதியாக இறைவனுக்கோ வீட்டில் சமையலுக்கு அடுப்பில் தீயாக என்னை மக்கள் வைப்பது வழக்கம்
கார்த்திகை நன்னாளில் மக்கள் என்னை விளக்கில் வைத்து வழிபடுவர்
என் ஆற்றலால் நான் உலகம் முழுதும் என்வசம் வைத்துள்ளேன் என்பது யாவரும் அறிந்த உண்மை
ஆகாயம்
----------------
நீலநிறமான என்னைப் பார்த்து பிள்ளைகள் வியக்க
அந்த நேரம் அவர்களுக்கு நிலவைக் காட்டி தாய் உணவளிப்பாள்
உலகமனைத்துக்கும் நான் போர்வையாக இருக்கிறேன்
என்னிடம் சூரியனும் சந்திரனும் விளையாடுவார்கள்
இரவுகளில் வைரமாக ஜொலிக்கும் நட்சத்திர கூட்டம்
மேகப் பஞ்சை ஆடையாக்கி மறைந்து விளையாடும் நிலவு.
என்னை சிவப்பும் மஞ்சளும் ஆக்கி விளையாடுவான் சூரியன்
என்னிடம் பலவகை கோள்கள் சுற்றி உருண்டு விளையாடும்
நான் நேசிக்கும் பூமிக்கு மழையை அவ்வப்போது அனுப்புவேன்.
மானிடர் அனுப்பிய செயற்கைகோள்களை என் தோள்கள் சுமக்கின்றன.
என்னை காணாதவர்கள் இல்லை கண்டபின் வியக்காதவரும் இல்லை
நிலம்
நான் மிகப் பெரிய கூரையில்லா வீடு எங்கும் இருப்பவள்
நான் அனைத்து உயிரினமும் நிற்க புவி ஈர்ப்பு செய்பவள்
இறை படைத்த அனைத்து உயிரினமும் என் மேல் தான் வாழும்.
விவசாயிகள் பயிர் செய்து வணங்கும் தெய்வம் நான் .
நான் மானிட வாழ்க்கையின் ஆதாரமாக இருப்பவள்
மலை, மரம், கடல், ஆறு, என் மேல் நிற்கும் ஓடும்.
கடவுள் போல் என்னுள் அனைத்து பொக்கிஷமும் அடக்கம்.
நான் பூகம்பமாக வெளிப்படும் நேரம் உயிரினம் திகைக்கும்
நான் ஆணா,பெண்ணா என்று கேட்பவர்களுக்கு நான் பெண் தான்,
காரணம் பொறுமை,தயை,கருணை கொண்டவள் என் பெயர் பூமாதேவி.
உயிரினம் கடைசியில் அடைக்கலம் நாடுவது என்னைத் தோண்டி தான்.
நீர்
ஆண்டவன் படைத்தவைகளில் முதன்மையானது நான்
உயிர் காக்கும் வழியில் முக்கியமானது நான்
வானத்தில் இருந்து பூமிக்கு வரும் மழை நான்
நில பரப்பில் அதிக ஆதிக்கம் செலுத்துவது நான்
கடலாக, நதியாக, ஏறியாக, ஓடையாக குளமாக
உப்பு இல்லாத பண்டம் குப்பையிலே ஆனால்
உப்பு என்னுள்ளடக்கம் என்பது உயிர்கள் அறிந்ததே
ஜீவராசிகளின் எல்லோரின் தாகம் தீர்ப்பவன் நான்
நான் இல்லையென்றால் உயிரினங்கள் இல்லை.
தாயின் பனி குடத்தில் இருப்பதும் நான் தான்.
பனியாக உறைந்தாலும் நீராவியாக மறைந்தாலும்
நான் இன்றி உலகம் இல்லை என்றறிவாய் மானிடனே
வாயு (காள ஹஸ்தி)
கண்ணால் நம்மால் காண முடியாதது இது
கைகளால் நம்மால் பிடிக்க முடியாதது இது
காணும் பொருள்கள் அசையும் வேளையில் உணருவது இது
கட்டுக்கு அடங்காமல் போனால் அழிக்கும் ஆற்றல் உள்ளது இது
அடக்க வைக்கப் பார்த்தால் உடைத்து வெளியேறும் இது
கடவுள் நமக்களித்த பெரும் கருணையினால் கிடைத்தது இது
உடலில் உயிரை வைப்பதற்கு உதவும் பொருள் இது
இதை உள்ளறிந்து உணர்ந்தால் அமைதியைக் கொடுக்கும் இது
இதனை முறைப்படி சுவாசித்தால் வாழ்வு வளமாகும் என்பது
தொன்று தொட்டு வழங்கி வரும் யோகிகளின் உபதேசமாகும்