கண் மூடி ரசித்தவளே
கண் மூடி ரசித்தவளே
**************************
கை இரண்டும்
கண் மூட
கைவிரல் இரண்டு
சிறிது விலக்கி
பார்வை விதைத்தாய்
தைக்கும் ஊசியாக
மனதில் நுழைந்தாய்
நூல் அருந்த பட்டமாக
கனவில் பறந்தேன்
மயில் விரிக்கும்
வண்ணத் தோகையாக
உதடுகள் மலர்ந்து
குயிலாக பாடும் பாட்டு
குருதி வழி பாய்ந்திடத்
தயிர் கடையும் மத்தாக
உள்ளத்தை கலக்கியே
கயிறு திரிக்கும் நாராக
இதயத்தில் பிணைந்தாயே
சமத்துவ புறா ஞான அ பாக்யராஜ்