ஒற்றை ரோஜா
உங்களது அனைத்து
குறுஞ்செய்திகளுக்கும்
எனது பதில்
ஒற்றை ரோஜா....
உங்களது அனைத்து
குற்றச்சாட்டுகளுக்கும்
எனது மறுப்பு
ஒற்றை ரோஜா
உங்களது அனைத்து
கோபங்களுக்கும்
எனது சமாளிப்பு
ஒற்றை ரோஜா
உங்களது அனைத்து
சோகங்களுக்கும்
எனது ஆறுதல்
ஒற்றை ரோஜா
உங்கள் பார்வைக்கேற்ப
உங்கள் நேரத்திற்கேற்ப
நேசத்திற்கேற்ப
தேவைக்கேற்ப வழியும்
வண்ணங்களை
பூசிக்கொள்ளும்
எந்தன் ஒற்றை ரோஜா வின்
நிறம் என்றென்றும்
கறுப்பு வெள்ளை தான்!
- மதிஒளி சரவணன்