மகிழ்ச்சி

மகிழ்ச்சி.

மகிழ்ச்சி என்னும்
மாய மங்கை,
மனிதர் மனதில்
மறைந்து இருப்பாள்,
தேடிச் செல்லாதவர்
யாரும் இல்லை.

தேடிச் சென்றவர்
சிலரோ!
செல்லும் பாதையிலே
காசு பணம்
பார்த்திடுவார்,
தேவைக்கு அதிகம்
பொறுக்கிடுவார்.

மன அமைதியை
தொலைத்திடுவார்,
மறைந்திருந்த
மங்கையும்
மனத்தை விட்டு
விலகிடுவாள்.

ஆக்கம்,
சண்டியூர் பாலன்.

எழுதியவர் : சண்டியூர் பாலன் (5-Nov-21, 6:38 am)
சேர்த்தது : இ க ஜெயபாலன்
Tanglish : magizhchi
பார்வை : 243

மேலே