தீபாவளியும் கண்ணனின் கீதையும்
' அழுக்காறு அவா வெகுளி இன்னாச்சொல்'
என்றிவை எல்லாம் வேண்டா அகந்தை.
நம் மனதில் சேர்க்கும் இருளாகும்;
இருளில் மூழ்கிய மனதை இருளின்
பிடியிலிருந்து மீட்க தீபஒளி.....தீபாவளி
இரவின் இருளை போக்கும் இரவியைப் போல
மனதின் இருளை போக்கும் கண்ணனின் கீதை
அகந்தையின் இருளில் தன்னை மறந்து
கண்ணனையே எதிர்த்த நரகாசுரனை மாய்த்தான் கண்ணபிரான்
இந்த அகந்தைப் பிணிக்கு இருளுக்கு அருமருந்து கீதை ஒன்றே
அதுவே ஒளி சேர்க்கும் என்றும் அறிந்திடுவோமே