எனக்கு பிடித்த தீபாவளி
எனக்கு பிடித்த தீபாவளி.
அண்ணன் வருவான்
சென்னையிலிருந்து,
அள்ளி வருவான்
கொடுப்பதற்கு,
பாட்டி, தாத்தாவை
மறந்திடமாட்டான்.
அக்கா வருவாள்
டெல்கியிலிந்து,
அத்தானும் வருவார்
அவளுடனே!
அடுத்த நாளே
திரும்பிடுவார்,
ஆபிசிலே ரொம்ப
வேலை என்று.
எவர் பேச்சையும்
கேட்கமாட்டார்,
ஆறுதலாக அவள்
வரட்டும் என்பார்.
அத்தான் இல்லா
தீபாவளி,
எனக்கு மிகவும் 🎇
பிடித்த தீபாவளி.
ஆக்கம்
சண்டியூர் பாலன.