கவியரசு கண்ணதாசன்-மெல்லிசை மன்னர்- 24062025 இன்று இவர்களின் பிறந்த நாள்

மெல்லிசை விஸ்வநாதன் பிறந்த நன்னாள் இன்று
கவிஞர் கண்ணதாசன் பிறந்த பொன்னாள் இன்று
இருவரும் இணைந்து சாதித்தது ஒன்றல்ல, அன்று
மாபெரும் இம்மேதைகளை இன்று பாடுதல் நன்று

விஸ்வநாதன்-ராமமூர்த்தி இசையமைப்பாளர்கள்
இவர்களின் மெட்டினை நம்பிய தயாரிப்பாளர்கள்
இசை ஜோடி கற்பனை ஊற்றில் பிறந்த மெட்டுகள்
அம்மெட்டுகளுக்கு உயிர் தந்த கவியரசின் வரிகள்

மனைவியின் மீதான உயிர்ப்பற்றே 'பாலும் பழமும்'
கணவன்மீதான தெய்வபக்தி 'எங்கே நீயோ நானும்'
அண்ணா தங்கை உயிர்ப்பாசம் 'மலர்ந்தும் மலராத'
அப்பாவி தம்பி ஏமாற்றம் 'பொன் ஒன்று கண்டேன்'

மகளை இழந்த தந்தையின் சோகம் 'பார் மகளே பார்'
தந்தை மகனின் போராட்டம் ' நல்லதொரு குடும்பம்'
தங்கை உயிர்மீட்க அண்ணா 'தண்ணீரிலே தாமரை பூ'
தாயைக்கண்ட பரவசப் பிள்ளை 'தெய்வமே தெய்வமே'

தெய்வ பக்தி பறை சாற்றும் 'தெய்வம் இருப்பது எங்கே'
கடவுளிடம் கருணைமனு 'தேவனே என்னைப்பாருங்கள்'
வாழ்க்கை தத்துவம் இந்த நாலடிகளில் 'வீடுவரை உறவு'
ஆன்மீக ரகசியத்தை தெரிவிக்கும் 'பூஜ்யத்துக்குளே ஒரு'

எம் எஸ் விஸ்வநாதன் இனிய மெட்டுகளுக்கு மன்னன்
கண்ணதாசன் பாடல்வரிகளுக்கு இணையற்ற அரசன்
எம் எஸ் வி, சிவாஜியின் நடிப்பை இசையில் துதித்தார்
கவியரசோ நவரசங்களைப் பாடல் வரிகளில் வடித்தார்

கவியரசு எழுதாத வாழ்க்கைத் தத்துவம் எதுவும் இல்லை
விஸ்வநாதன் மெட்டுப்போடாத நவரசம் ஒன்றும் இல்லை
இவ்விருவரையும் போற்றிப்பாட வார்த்தைகளே இல்லை
இந்த இரு ஜாம்பவான்களுக்கு நிகராக எவருமே இல்லை

ஜாய்ராம்

எழுதியவர் : ராமசுப்பிரமணியன் (24-Jun-25, 9:27 pm)
சேர்த்தது : Ramasubramanian
பார்வை : 44

சிறந்த கவிதைகள்

மேலே