ஒரு ஆதங்கம் ஒரு அரற்றல்
ஒரு ஆதங்கம்..
ஒரு அரற்றல்...
15 / 06 / 2025
அடிமரமாய் தென்னகம்
ஆழமாய் பதிந்திருக்க
ஆலம் விருட்சமாய்
வடமாநிலம் பரந்திருக்க
நமது பாரதம்
மொழி கலாச்சாரமெனும்
பல கிளைகள் கொண்டு
செழித்து ஓங்கி வளர்ந்து
விண்தொட்டு விரிந்திருக்க
ஒவ்வொரு கிளையாய்
வெட்டுதல் என்ன நியாயம்?
வேருக்கு வெந்நீர்
ஊற்றுதல் என்ன கொடுமை?
மரம் சாய்ந்தால்
கூடுகட்டி குடியிருக்கும்
பறவைகளின் கதி
அதோகதிதானா?
புகலிடம் புதைகுழிதானோ?
நிழல் இல்லாமல்
சுடு வெயில்தானோ?