முஸ்கன் இங்க வாடி

முஸ்கன், முஸ்கன். இங்க வாடி. எங்கடி போய்ச் தொலஞ்ச?

@@@@@@@@

(தெருவில் அந்த வீட்டின் ஓரமாகச் செல்லும் இரண்டு இளைஞர்கள்)

முஸ்கன். இதென்னடா பேரு.

@@@@@@@@@@@

இந்திப் பேரா இருக்கும். பேரு 'ன்'ன்னு முடியற பேரா இருக்கிறரதால

'முஸ்கன்' பையன் பேரா இருக்கும்.


@@@@@

ஆமாம். முருகன், கண்ணன் மாதிரி 'முஸ்கன்'ன்னும் பையன்

பேராத் தான் இருக்கும்.

(அந்த வீட்டருகே நின்று அவர்களில் ஒருவன்):

அம்மா, அம்மா. வீட்டில யாரு இருக்கிறீங்க?

@@@@@

(ஒரு பாட்டி வந்து) யாரு தம்பிகளா நீங்க? என்ன வேணும்?


@@@@@@@

இல்ல. முஸ்கன், முஸ்கன் -ன்னு பல தடவ கூப்பிட்டீங்க. உங்க

பேரன் எங்க போயிட்டான். பின்னாடித் தெருவில தான் எங்க வீடு.

நீங்க அவனோட அங்க அடையாளங்கலைச் சொன்னீங்களா நாங்க

அவனைத் தேடிக் கண்டுபிடிச்சுக் கூட்டிட்டு வர்றோம்.

@@@@@@@

தம்பிகளா, எனக்கு பேரன் கெடையாது. முஸ்கன் என்னோட பேத்தி

பேரு. அது இந்திப் பேரு. அவள் விளையாடப் போயிருப்பா. எங்

குரலைக் கேட்டா எங்கிருந்தாலும் முஸ்கன் ஓடி வந்திருவா.

@@@@@@@@@@

சரி பாட்டி. நாங்க வர்றோம்.

@@@@@@

நல்லது தம்பிகளா.

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

Muskan = Smile. Indian Feminine name

எழுதியவர் : மலர் (17-Oct-25, 8:47 pm)
சேர்த்தது : மலர்91
பார்வை : 6

மேலே