புட்டு மூஞ்சி
திரைப்பட இயக்குநர் தில்லைமாறன்:
நம்ம கதாநாயக நடிகரை அவரது
இரசிகர்களே அவரைப் புட்டு மூஞ்சி
நடிகர்னு சொல்லிட்டே அவரோட
பதாகைக்கு பால் அபிசேகம் செய்யறாங்க.
@@@@@@@
உதவி இயக்குநர்: அவரை எதற்கு புட்டு
மூஞ்சி நடிகர்னு சொல்லறாங்க.
@@@@@@@
என்னய்யா தெரியாத மாதிரி கேட்கிறாய்.
அகலமான மூஞ்சி. கன்னம் இரண்டும்
புட்டு மாதிரி உப்பிட்டீட்டு இருக்குது.
முகத்து ஏற்ற தாடை இல்லை. சின்ன
தாடை. கன்னப் புட்டுகள் தான் அவரோட
தனி அடையாளம். எப்ப்டியோ நல்ல
பிறமொழிப் படங்களோட கதை, பாடல்கள்.
அந்தக் கதைகள், பாடல் மெட்டுகள் சண்டை
காட்சிகள், துள்ளித் துள்ளி குதிச்சு கால்,
கையை உதறி ஆடும் நடனம். தமிழரல்லாத
பாடகர்கள். இதெல்லாம் சேர்ந்து
எப்படியோ நம்ம புட்டோட படங்கள் வெள்ளி
விழாப் படங்களாகிச் சக்கை போடு
போடுது.
@@@@@@@@
ஆமாம். அவரோட புட்டு மூஞ்சி அழகை
இரசிக்க இலட்சக்கணக்கான இரசிகர்
பட்டாளம். அவர் படத்தின் முதல் காட்சியில்
தோன்றும் போது இரசிகர்கள் "புட்டு
பொன்னழகர் வாழ்க, வாழ்க" என்று
வாழ்த்தி திரை அரங்கே அதிரும்படி
விசிலடுச்சு, கைதட்டி ஆரவாரம்
செய்யறாங்க. பல இரசிகர்கள் புட்டுவின்
படத்தை எப்படியாவது வெள்ளிவிழா
படமாக்குணும்னு ஒவ்வொரு இரசிகனும்
ஒவ்வொரு படத்தையும் பத்துத் தடவை
பார்க்கிறான். நம்ம புட்டுவை மிஞ்ச
வேறோரு நடிகர் பிறக்க முடிதாதுன்னது
மற்ற இயக்குனர்கள் எல்லாம் பொறாமைப்
படறாங்க.
@@@@@@@@@@@
ஏன் புட்டு பொன்னழகர் படங்களை நான்
மட்டும் தான் இயக்குணும்னு ஒப்பந்தம்
போட்டுட்டாரு புட்டு. தெரியுமா?
@@@@@@@@
அவ்ரே தயாரிப்பாளர். நமக்குப் பணம்
தாராளமாக் கொடுக்கிறார்.

