இனியென்ன வேண்டும் இயம்பு - நேரிசை வெண்பா

நேரிசை வெண்பா

கனிபோன்ற பெண்ணவளே கண்டவுடன் கொண்ட
இனிதான காதலினால் இன்பந் – தனித்தே
நனிசிறக்கப் பெண்மானே நான்மகிழ்ந்தேன்; நேரில்
இனியென்ன வேண்டும் இயம்பு!

- வ.க.கன்னியப்பன்

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (7-Dec-25, 10:33 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 4

மேலே