நட்பு
நட்பு - பூமியை இயக்கும் நேசமான சுவாசம்- இது
சந்தன மலர்களின் சாகாத வாசம்!
பிள்ளைப் பிராயத்திலே கூடிச் சேரும் முதல் உறவு - இது
அடி சறுக்கும் காலத்திலே கை கொடுக்கும் நல் உறவு!
நட்பு - சாதி மதம் கடந்து நிற்கும் சமதர்ம சமுதாயம் - இது
ஒற்றுமைக்குப் பாதை சொல்லும் பிரபஞ்சத்தின் சங்க நாதம்!
நட்பு - இதிகாசம் புராணம் எல்லாம் எடுத்துச் சொல்லும் ஒரு மந்திரம் - இது
தீவிரவாதம் எனும் சொல்லை ஒழிக்கச் செய்யும் ஒரு தந்திரம்!
நட்பு - அரும்பு மீசை காதலுக்கு தூதுவிடும் வெள்ளை புறா - இது
கணவன் மனைவி உறவுக்கு காட்சியாகும் பிள்ளை நிலா!

