சோசுப்பிரமணி - சுயவிவரம்
(Profile)

வாசகர்
| இயற்பெயர் | : சோசுப்பிரமணி |
| இடம் | : குவைத் |
| பிறந்த தேதி | : 29-Jan-1970 |
| பாலினம் | : ஆண் |
| சேர்ந்த நாள் | : 13-Feb-2013 |
| பார்த்தவர்கள் | : 115 |
| புள்ளி | : 19 |
பிறந்து வளர்ந்தது சென்னையில்...
பணியின் காரணமாய் இருப்பது குவைத்தில்...
தமிழின் உணர்வில் இணைந்தது "எழுத்தில்!"..
முண்டாசு கவியழகே,
முறுக்கு மீசை பாரதியே-
முத்தமிழின் சொல்லெடுத்து
மூச்சாக வாழ்ந்தாயே!
வீர சுதந்திரம் வேண்டும் என்று முழங்கிய பாரதியே - இன்று வந்த சுதந்திரம் வழி மாறி போவதை வேடிக்கை பார்ப்பீரோ?
தாயின் மணிக்கொடி பறப்பதை பார்க்க விரும்பிய பாரதியே - இன்று கொடியினை ஏற்றவே படையுடன் வருவதை சுதந்திரம் என்பீரோ?
அடிமை வாழ்வே வேண்டாம் என்று பாடிய பாரதியே - இன்று
தேசத்தின் பெருமையை நீசர்கள் விற்பதை வாடிக்கை என்பீரோ?
காசியில் புலவர் பேசும் உரை கேட்க கருவி தான் கேட்டீரே - இன்று
வாட்ஸ்அப் ஈமோ பேஸ்புக் உண்டு
சாட்டிங் தான் வருவீரோ?
ஜாதி மதங்களைப் பார்ப்போம் என்று பொங்கிய பாரதியே - இன்
நட்பு - பூமியை இயக்கும் நேசமான சுவாசம்- இது
சந்தன மலர்களின் சாகாத வாசம்!
பிள்ளைப் பிராயத்திலே கூடிச் சேரும் முதல் உறவு - இது
அடி சறுக்கும் காலத்திலே கை கொடுக்கும் நல் உறவு!
நட்பு - சாதி மதம் கடந்து நிற்கும் சமதர்ம சமுதாயம் - இது
ஒற்றுமைக்குப் பாதை சொல்லும் பிரபஞ்சத்தின் சங்க நாதம்!
நட்பு - இதிகாசம் புராணம் எல்லாம் எடுத்துச் சொல்லும் ஒரு மந்திரம் - இது
தீவிரவாதம் எனும் சொல்லை ஒழிக்கச் செய்யும் ஒரு தந்திரம்!
நட்பு - அரும்பு மீசை காதலுக்கு தூதுவிடும் வெள்ளை புறா - இது
கணவன் மனைவி உறவுக்கு காட்சியாகும் பிள்ளை நிலா!
26-08-2016 அன்று குவைத் வளைகுடா வானம்பாடிகள் கவிஞர்கள் சங்கம் நடத்திய கவிதைப்போட்டியில் இரண்டாம் பரிசு பெற்ற எனது கவிதை!
வாய்ப்பளித்த குவைத் வளைகுடா வானம்பாடிகள் கவிஞர்கள் சங்கத்திற்கும், மேதன் நிறுவனத்திற்கும், போட்டியில் கலந்து கொள்ளத் தூண்டுதலாய் இருந்த திரு.கார்த்திகேயன் அவர்களுக்கும், அருமை மிகு நடுவர்கள் அனைவருக்கும், மற்றும் வாழ்த்திய உறவுகள், நண்பர்கள் அனைவருக்கும் மிக்க நன்றிகள்!
நஞ்சை உண்டு...புஞ்சை உண்டு...!
இயற்கை விவசாயத்தால்
இந்தியாவை மாத்திடுங்க-
இரசாயன உரக்கழிவை
இனியாவது தடுத்திடுங்க...
நம்மாழ்வார் நட்ட விதை
நாடெல்லாம் பரப்பிடுங்க-
நஞ்சை நிலமெல்லாம்
நஞ்சாத்
26-08-2016 அன்று குவைத் வளைகுடா வானம்பாடிகள் கவிஞர்கள் சங்கம் நடத்திய கவிதைப்போட்டியில் இரண்டாம் பரிசு பெற்ற எனது கவிதை!
வாய்ப்பளித்த குவைத் வளைகுடா வானம்பாடிகள் கவிஞர்கள் சங்கத்திற்கும், மேதன் நிறுவனத்திற்கும், போட்டியில் கலந்து கொள்ளத் தூண்டுதலாய் இருந்த திரு.கார்த்திகேயன் அவர்களுக்கும், அருமை மிகு நடுவர்கள் அனைவருக்கும், மற்றும் வாழ்த்திய உறவுகள், நண்பர்கள் அனைவருக்கும் மிக்க நன்றிகள்!
நஞ்சை உண்டு...புஞ்சை உண்டு...!
இயற்கை விவசாயத்தால்
இந்தியாவை மாத்திடுங்க-
இரசாயன உரக்கழிவை
இனியாவது தடுத்திடுங்க...
நம்மாழ்வார் நட்ட விதை
நாடெல்லாம் பரப்பிடுங்க-
நஞ்சை நிலமெல்லாம்
நஞ்சாத்
மொட்டுகளாய் பறிக்கப்பட்டு
உயிரும் தான் பிரிந்தாலும்
ஒருநாள் வரையேனும்
மணம்வீசி வாடுகின்றாய்!
உன் மூச்சை நிறுத்துகின்ற
என் இனத்தின் கொலைவெறியும்
மன்னிக்கும் விதமாக
மணம் பரப்பி மடிகின்றாய்!
நீரூற்றி வேர்வளர்த்த
விவசாயியின் வியர்வை மணம்-
வீணாகக் கூடாதென்று
விதி முடிந்தும் மணம் தருவாய்!
ஆயுளுக்கும் மனித இனம்
அறியாத புதிரை யெல்லாம்
ஒருநாளின் வாழ்வினிலே
உலகினுக்கு புரிய வைப்பாய்!
பெண்மையின்றி பொழுதும் விடியுமோ?
மகளிரும் இன்றி மனிதம் பிறக்குமோ?
ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பொழுதும்
பெண்ணினம் போற்ற பூமியும் மறக்குமோ?
அர்த்தநாரி தத்துவத்தை ஆதரிக்கும்
ஆணினம் தானே நாங்கள்!
ஆவி உள்ள காலம் வரையில்
அன்பு கலந்தே போற்றிடுவோமே!
காரிலே தூரப்பயணம் –
இரவிலே துவங்கிய பயணம்
இன்னமும் தொடர்கிறது!
புலர்கின்ற பொழுதின்
சில்லென்ற காற்றினால்
விழித்த விழிகள்-
பரந்து விரிந்த உலகத்தை
பார்வையில் பரிசிக்கின்றது!
பச்சைப்பசு மலையையும்
நீலநிற வானத்தையும்
இரவெல்லாம் இணைத்திருந்த
வெண்ணிற மேகமவள்-
புணர்ச்சியினால் பெற்றிட்ட
செங்கதிரோன் முகம் கண்டு
அங்கமெல்லாம் பூரிப்பாய்
மெல்லிய ஆடையை
மெலிதாய் விலக்கியே செல்லும்
மென்மையான காலை!
மூடுபனியின் குளிரை
முழுமதியின் துணையோடு
முழுதாய் அனுபவித்த
முக்கோடி உயிர்களும்,
முன்னமே எழுந்திட்ட
ஆதவன் எழில் கண்டு – அங்கே
சோம்பல் களையும் வேளை!
வண்ண வண்ண மேகதினிட
காற்றடைத்த பை இது-
கவலைகளை சுமப்பது-
நூலறுந்த பட்டமென
துன்பங்களில் துவளுது!
சூழ்நிலைகளின் கைதி இது-
சூட்சுமத்தால் திணறுது-
காரிருளில் மூழ்கிப்போய்
பேரொளியை மறக்குது!
நிலையற்ற உடலே இது-
நிம்மதியை நாடுது-
எல்லாமே எதிரிருந்தும்
ஏக்கத்தாலே வாடுது!
இருப்பதையே இன்பமுடன்
ஏற்றுக்கொள்ளும் பக்குவம்
இருந்துவிட்டால் மானுடர்க்கு
கவலைகளும் கண்ணாமூச்சியே!
கவலைகளும் ஆனந்தமும்
உள்ளத்தில் ஒன்றாகட்டும்!
இரவும் பகலும் போலே
இயற்கையாய் நிகழ்ந்திடட்டும்!