தங்கமணிகண்டன் - சுயவிவரம்
(Profile)
எழுத்தாளர்
இயற்பெயர் | : தங்கமணிகண்டன் |
இடம் | : பனைவிளை,இராதாபுரம்,திருந |
பிறந்த தேதி | : 30-Apr-1990 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 12-Jul-2014 |
பார்த்தவர்கள் | : 968 |
புள்ளி | : 147 |
நூறுமுறை தோற்றவனை
சென்று பார்
வெற்றியின் வாசல்
கண்ணெதிரே தெரியும்!
என் வாழ்க்கை
முன்னுரையாக இருந்தாலும் சரி
அதில் தோன்றும்
முதல் வார்த்தை
"நீயாக" தான்
இருப்பாய் ..,
என்று நண்பன் ஒருவன்
தன நண்பனிடம்," நண்பா
உன் நட்பின் விலை என்னவோ"
நான் அறியலாமா என்று கேட்பானாயின்
அவன் நண்பனும் நட்பும்
காடும் மேடும் வயலாகிட
கல்லும் உருகி நீராகிட
வியர்வை சிந்திட உருவானது நெற்களம்
விவசாயி வாழ்க்கை முழுதும் போர்க்களம்!
தினம் தினம் சவாலை சந்தித்து
திடமானது இவன் தோள்கள்!
சர்க்காரை நம்பியே திவாலாகி
இருளாய் போனது இவன் நாள்கள்!
இவன் விழித்த பிறகே
விடியலும் விடிகிறது நாளும்!
மாட்டைப் போன்று உழைப்பதாலே
மதிப்பிழந்து போனான் போலும்!
விண்ணையும் மண்ணையும் நம்பி
தன்னை இழந்த போதும்!
மண்ணுக்கெல்லாம் சோறு போட
மனதளவும் பார்த்ததில்லை பேதம்!
பருவமழை பொய்த்து பொய்த்து
பாழ்படுத்துகிறது மேலும் மேலும்!
இறைவனும் இரக்கமற்றோ
இவனைப் படைத்தான் போலும்!
ஊருக்கெல்லம் சோறு போட
உடல
கால் முளைத்த நிலவாய்
என்னை களவாடி சென்றுவிட்டாள்!
தேள் கொட்டிய திருடனாய்
வெளியே சொல்ல முடியாது தவிக்கிறேன்!
கடலில் கரைத்த பெருங்காயத்தை
காணும் இடமெங்கும் தேடுகிறேன்!
உடலில் வலிக்காத பெரும்காயத்தை
உயிரைத் தீண்டி உணர்கிறேன்!
அத்தி பூத்தாற் போல அவள் வரவைக் காண
அடங்கி கிடக்கிறேன் மொத்தமாய்!
புத்தி கேட்டு திரிகிறேன்
பூமியில் அவளைக் கண்ட நாள்முதலாய்!
தென்னை மரத்து கள்ளு போல
என்னை போதையில் தள்ளுகிறாள்!
தீயில் விழுந்த புழுவாக
தினமும் துடிதுடித்து போகிறேன்!
விமோட்சனம் வேண்டியே தவம் இருக்கிறேன்
வீதியில் அவள் வரும் நாளுக்காய்!
ஏனோ வர மறுக்கிறாள்
என்னை பிரி
என்னவளே!
உன் அழகு
என்ன விலை?
கொன்னவளே!
உன் அழகால்
தினம் கொன்னவளே!
அழகு என்னும்
விலங்கால்
என்னை சிறை பிடிக்கிறாய்!
விடுதலை செய்திட
வேண்டின்
ஏனோ நீயும் மறுக்கிறாய்!
இதழோரம் புன்சிரிப்பால்
என்னை நீயோ
புண்படுத்துகிறாய்!
உன்னோடு வாழ்ந்திட விழையும்
என்னையும் நீயே
பண்படுத்துகிறாய்!
உன் உதட்டின் மேல் மச்சத்தை
பிச்சை கேட்ட
தூண்டுகிறாய்!
பிரிந்திருக்கும் வேளையில் எல்லாம்
உன் நினைவால் என்னை
தீண்டுகிறாய்!
நீரில் வாழும் மீனுக்கும்
தாகம் அதை
கொடுக்கிறாய்!
உன் நினைவால் வாழும்
என் தேகம் அதையும்
கெடுக்கிறாய்!
உன் செவ்வாயால்
எனைத் திருடி
செவ்வாயில் சேர்க்
உலகம் மாறுகிறது
யார் காரணம்?
உறவுகள் விலகுகிறது
யார் காரணம்?
சமைக்கும் உணவைக் கூட
ஒட்டாத பாத்திரத்தில் சமைத்து
உறவுகளையும் நம்மோடு
ஒட்டாது ஆக்கிவிட்டோம்!
உண்ணும் முறையை மறந்தோம் - தினம்
நோயாளிகளாய் பிறந்தோம்!
துரித உணவுகளையே உண்டோம் - இதனால்
துரிதமாய் மாண்டோம்!
இயற்கை வாழ்வை மாற்றி
இயந்திர வாழ்க்கைக்கு மாறினோம்!
ஆபத்து என உணர்ந்தும்
அதையே தினம் செயத் துணிந்தோம்!
நாகரீகம் என்னும் பெயரால்
நம்மை நாமே கூறுபோட்டோம்!
காலம் மாறியது என்றெண்ணி
காலாவதி ஆகிப் போனோம்!
விஞ்ஞானத்தில் காட்டும் அக்கறையை - நம்
மெஞ்ஞானத்தில் காட்ட மறந்தோம்!
நிலவில் தண்ணீர் தொடும் நாமோ
மழை மேகம் கண்டால்
மகிழ்வது மயில் மட்டுமல்ல
விவசாயியும் தான்....
வான் தேசத்து இளவரசி
பூமிக்கு வருகிறாள்!
ஊரெங்கும் தோரணமாய்
வானவில்லும் வந்தது!
அலங்கரிக்கப்பட்ட வண்ண விளக்குகளாய்
மின்னல் மின்னியது!
வேட்டு சத்தமாய் விண்ணை பிளந்து
இடியும் இடித்தது !
அவள் வந்து போன பின்னே
அவணியெங்கும்
ஆனந்த தாண்டவம்...
விண்ணுக்கும்
மண்ணுக்குமான உறவை
மீண்டும் புதுப்பித்துக் கொண்டது
- மழை -
அவள் வந்த போது
காண மறுத்த என் கண்கள்
அவள் வராத போது
கதறி அழுகின்றன
அவளை காண வேண்டுமென்று!.......